search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை டாப்சி
    X
    நடிகை டாப்சி

    குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி

    குடிபோதையிலும் வேகமாகவும் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய இருக்கிறேன் என்று நடிகை டாப்சி கூறியுள்ளார்.
    டாப்சி நடிப்பில், காஞ்சனா-2, வை ராஜாவை ஆகிய படங்கள் கடந்த வருடம் வெளிவந்தன. தற்போது இந்தியில் 4 படங்களில் நடித்து வருகிறார். இதற்காக மும்பையில் முகாமிட்டு இருக்கிறார். இந்த நிலையில், வாகன ஓட்டிகளால் நடக்கும் விபத்துகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.

    இது குறித்து டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

    ‘‘வேகமாக பைக் ஓட்டுவது சிலருக்கு போதை மாதிரி. இதனால் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் உணர்வது இல்லை. எனக்கு சிறு வயதில் பைக் ஓட்ட ஆர்வம் இருந்தது. ஆனால் கண்முன்னே நடந்த சில விபத்துகளை பார்த்த பிறகு பைக் ஆசையை விட்டு விட்டேன். வாழ்க்கை பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். விபத்துகளுக்கு அதை பலியிடக்கூடாது.

    நான் படப்பிடிப்புகளுக்காக வெளியூர்களுக்கு செல்லும்போது ரோடுகளில் நிறைய விபத்துகளை பார்த்து இருக்கிறேன். மும்பை நகரம் இந்த விஷயத்தில் ரொம்ப மோசம். விபத்துகள் இங்கு தினமும் நடக்கின்றன. சமீபத்தில் ஒரு இந்தி படப்பிடிப்புக்காக சென்றேன். அங்கு என்னிடம் பைக்கை கொடுத்து ஓட்டச்சொன்னார்கள். மிகவும் பயந்தேன். விபத்து இல்லா பயணத்தை வற்புறுத்தி விரைவில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

    இதற்காக டெல்லியில் உள்ள எனது தோழிகளை சேர்த்துக்கொண்டு புதிய அமைப்பு தொடங்க இருக்கிறேன். அந்த அமைப்பு மூலம் விபத்துகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்வேன். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது. வேகமாக ஓட்டக்கூடாது என்றெல்லாம் மக்களிடம் பிரசாரம் செய்வேன்.’’

    இவ்வாறு டாப்சி கூறினார்.
    Next Story
    ×