என் மலர்
சினிமா
2.0 படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கிறார்: சென்னை அருகே பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பு
‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் ‘2.0’ படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கிறார். சென்னை அருகே அமைத்துள்ள பிரமாண்ட அரங்கில் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் விஞ்ஞானி, எந்திர மனிதன் ஆகிய இரு தோற்றங்களில் நடித்த ‘எந்திரன்’ படம் 2010-ல் வெளியாகி வசூல் குவித்தது. இதனால் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஷங்கர் இதற்கான திரைக்கதையை உருவாக்கி ரஜினிகாந்தின் சம்மதத்தையும் பெற்றார். ரூ.350 கோடி செலவில் இந்த படத்தை தயாரிக்க முடிவானது. இதில் கதாநாயகியாக நடிக்க எமிஜாக்சனும் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் படப்பிடிப்பு தொடங்கியது. வடபழனி ஸ்டூடியோக்கள், அடையாறு போட் கிளப் போன்ற பகுதிகளிலும் ரஜினிகாந்த் நடிக்க படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகள் நடப்பது போன்றும், அதில் வில்லனாக வரும் அக்ஷய்குமார் ஆக்ரோஷமாக தோன்றுவது போன்றும் காட்சிகளை படமாக்கினார்கள்.
பின்னர், ரஜினிகாந்த் கபாலி பட வேலைகளில் ஈடுபட்டதால் 2.0 படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனாலும் ரஜினிகாந்த் இல்லாமல் மற்ற நடிகர்-நடிகைகள் தோன்றும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வந்தன. 50 சதவீத படப்பிடிப்புகளை முடித்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் கூறினார். இந்த நிலையில், அமெரிக்காவில் ஓய்வுக்காக சென்ற ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் அவருக்காக காத்திருந்த 2.0 படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள்.
ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தற்போது கபாலி படம் திரைக்கு வந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து 2.0 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படப்பிடிப்பு குழுவினர் தீவிரமாகி உள்ளனர்.
பூந்தமல்லி அருகே பலகோடி ரூபாய் செலவில் சென்னை நகரம் போன்ற அரங்கு அமைத்துள்ளனர். இந்த அரங்கில் பலமாடி கட்டிடங்கள், தார் ரோடுகள், கடை வீதிகள், வணிக வளாகங்கள், ரெயில் நிலையம், எந்திர மனிதனை உருவாக்கும் விஞ்ஞான கூடங்கள் ஆகியவை அரங்குகளாக அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அரங்கில் ஓரிரு வாரத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர். நவம்பர் மாதம் வரை படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. அடுத்த வருடம் 2.0 படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

Next Story