search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சூர்யா, சிவகுமார்
    X
    பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சூர்யா, சிவகுமார்

    மறைந்த பஞ்சு அருணாச்சலம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்

    மறைந்த பஞ்சு அருணாச்சலம் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    பிரபல வசனகர்த்தாவும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் இன்று சென்னையில் காலமானார். இசையமைப்பாளர் இளையராஜாவை அன்னக்கிளி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். மேலும், ரஜினி, கமல் ஆகியோரின் அனேக படங்களுக்கு இவர் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.



    இந்நிலையில், மறைந்த பஞ்சு அருணாச்சலத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பஞ்சு அருணாச்சலம் மறைந்த செய்தி அறிந்ததும், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    அவர்களில், நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், கிருஷ்ணா, மனோபாலா, நாசர், சாந்தனு, ஜெயம் ரவி, சிபி ராஜ், ஜித்தன் ரமேஷ், விஜய் வசந்த், கோவை சரளா, குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், செம்மீன் ஷீலா, இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், வெங்கட் பிரபு, ஆர்.வி.உதயகுமார், தரணி, பா.ரஞ்சித், எஸ்.வி.சேகர், சுந்தர்.சி., சந்தான பாரதி, சசி, ஸ்டான்லி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், டி.சிவா, தனஞ்செயன் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
    Next Story
    ×