search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஷாலுடன் திருமணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி
    X

    விஷாலுடன் திருமணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி

    விஷாலுடன் திருமணம் செய்யப்போவதாக வெளிவந்த வதந்திகளுக்கு வரலட்சுமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் என்ன சொன்னார்? என்பதை கீழே பார்ப்போம்...
    சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘போடா போடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சரத்குமாரின் மகள் வரலட்சுமி, பாலா நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து, தற்போது தமிழ், மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில்லை, விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் இடையே காதல் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் மீடியாக்களில் செய்திகள் பரவி வந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில்கூட விஷால் பேசும்போது, என்னுடைய திருமணம் புதிதாக கட்டவிருக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெறும். அதற்காக, திருமண மண்டபத்தை புக் செய்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

    ஆனால், அதை வைத்துக்கொண்டு மீடியாக்களில் விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் பரவத் தொடங்கியது. இதற்கு இரண்டு பேர் தரப்பிலும் எந்த பதிலும் சொல்லாமலே இருந்து வந்தனர். இந்நிலையில், முதன்முறையாக இந்த செய்திக்கு வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, இப்போதைக்கு யாரையும் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னுடைய வேலையை மட்டுமே காதலிக்கிறேன். எனவே, என்னுடைய திருமண செய்தி பற்றி யாரும் வதந்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். விஷாலை திருமணம் செய்துகொள்ளப்போவதாக வெளிவந்த வதந்திகளுக்கு வரலட்சுமி கொடுத்த முற்றுப்புள்ளியாகவே இதை கருதவேண்டும். 
    Next Story
    ×