என் மலர்
சினிமா
X
ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி
Byமாலை மலர்6 Sept 2016 3:48 PM IST (Updated: 6 Sept 2016 3:49 PM IST)
சூப்பர் ஸ்டார் ஒருவரின் பேத்தி ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அந்த சூப்பர் ஸ்டார் யார்? அந்த பேத்தி யார்? என்பதை கீழே பார்ப்போம்.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘தேவி’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி சாயிஷா சைகலிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இறுதியாக, அவரைத்தான் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
சாயிஷா சைகல் இந்தியில் அஜய்தேவ்கான் நடித்த ‘சிவாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், ‘அகில்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். தமிழுக்கு முதன்முறையாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். திரு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

Next Story
×
X