என் மலர்
சினிமா
X
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
Byமாலை மலர்3 Oct 2016 11:44 AM IST (Updated: 3 Oct 2016 11:44 AM IST)
மனோபாலா தயாரித்து வந்த பாம்பு சட்டை படம் தற்போது வேறொருவர் கைவசம் மாறியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
‘சதுரங்கவேட்டை’ படத்தை தொடர்ந்து மனோபாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பாபி சிம்ஹா நடிப்பில் ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை தயாரித்தார். பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். இந்நிலையில், இப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென நின்றுவிட்டது.
மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் தயாரிப்பு உரிமையை மனோபாலாவிடமிருந்து பிரபல விநியோகஸ்தரான சினிமா சிட்டி கங்காதரன் என்பவர் வாங்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் என்பவர் இயக்கி வருகிறார். மனோபாலா தேர்வு செய்த கதை வர்த்தக ரீதியாக வெற்றுபெறும் எந்ற நம்பிக்கையிலேயே இந்த படத்தை வாங்கியுள்ளதாக கங்காதரன் தெரிவித்துள்ளார். இப்படத்தை அபி & அபி நிறுவனத்தின் அதிபர் அபினேஷ் இளங்கோவனுடன் இணைந்து கங்காதரன் வெளியிடவுள்ளார்.

Next Story
×
X