search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அமைரா தஸ்தூரின் ஆட்டத்தை பார்த்து மெய்மறந்த சந்தானம்
    X

    அமைரா தஸ்தூரின் ஆட்டத்தை பார்த்து மெய்மறந்த சந்தானம்

    ஓடி ஓடி உழைக்கணும் படத்துக்காக அமைரா தஸ்தூர் ஆடிய ஜாலியான ஆட்டத்தை பார்த்து சந்தானம் மெய்மறந்து போயுள்ளார்.
    சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’. இப்படத்தின் கதாநாயகியாக ‘அனேகன்’ பட நாயகி அமைரா தஸ்தூர் நடித்து வருகிறார். மேலும், ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகி பாபு, மது சூதனன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன் இயக்கி வருகிறார்.

    இப்படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் அமைரா தஸ்தூர் ஜாலியாக ஆடி, பாடிய பாடல் காட்சி ஒன்று சென்னை செம்மொழி பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜா நடனம் அமைத்துள்ளார். அமைரா தஸ்தூர் அந்த பாடலில் ஜாலியாக ஆடும் அழகை பார்த்து சந்தானம் மெய்மறந்து ரசித்த காட்சியையும் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.



    இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். இவர்களுடைய தயாரிப்பில் ‘ஒரு பக்க கதை’, ‘எங்க மங் சங்’ ஆகிய படங்களும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×