என் மலர்
சினிமா
X
கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்24 Jun 2017 1:34 PM IST (Updated: 24 Jun 2017 1:34 PM IST)
கூடுதல் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள தடை உத்தரவு, திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களை திரையிடும்போது, தியேட்டர் உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னை ஐகோர்ட்டில், செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதித்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை பதில் மனுவாக தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக நில நிர்வாகத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவையும், ஐகோர்ட்டின் தடை உத்தரவையும் மீறி தியேட்டர் உரிமையாளர் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றனர். எந்தெந்த தியேட்டர்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விவரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரவை மீறிய தியேட்டர்களுக்கு அபராதம் விதித்தல், உரிமத்தை நிறுத்தி வைத்தல் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதி, ‘கூடுதல் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள தடை உத்தரவு, திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து வரும் ஜூலை 10-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Next Story
×
X