search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தாயம் பட இயக்குனர் கண்ணன் ரங்கசாமி மரணம்
    X

    தாயம் பட இயக்குனர் கண்ணன் ரங்கசாமி மரணம்

    ‘தாயம்’ படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் இன்று காலமானார்.
    தாயம் தமிழ் திரைப் படத்தை இயக்கியவர் கண்ணன் ரங்கசாமி (29). இன்னும் திருமணம் ஆகவில்லை. இளம் வயதிலேயே இயக்குனராகி தமிழ் பட உலகில் நன்கு அறிமுகமானார்.

    இவர் கடந்த மாதம் மாரடைப்பு எற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் கோமாவில் இருந்து நினைவு திரும்பியது. 40 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×