search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பெண் கிடைத்த சந்தோஷத்தில் சல்மான்கான்
    X

    பெண் கிடைத்த சந்தோஷத்தில் சல்மான்கான்

    பாலிவுட் நடிகர் சல்மான்கான் தனக்கு பெண் கிடைத்தது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #SalmanKhan
    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், 52 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஐஸ்வர்யாராய், கேத்ரினா கைப், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, என பல நடிகைகளுடன் காதல் இருந்ததாக தகவல் வெளியானது. ஒவ்வொரு முறையும் அவருக்கு திருமணம் என செய்திகள் வரும் பிறகு இல்லை என்றாகி விடும். 

    கடைசியாக ரொமானிய நடிகை லுலியாவை சல்மான்கான் காதலிப்பதாகவும், பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று சல்மான் கான் அவரது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு பெண் கிடைத்தது என்று இந்தியில் டுவிட் செய்திருக்கிறார். இந்த டுவிட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து அடுத்த படத்தின் கதாநாயகி கிடைத்துவிட்டது என்று பதிவு செய்திருக்கிறார்.

    சல்மான் கானின் அடுத்து வரும் அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார், இப்படம் 2019 இல் வெளியாகிறது. இந்த படத்தில் ஆயுஷ் சர்மா நடிக்க இருக்கிறார்.
    Next Story
    ×