என் மலர்
சினிமா
X
நாளை தனது சினிமா பயணத்தை துவக்குகிறார் துருவ் விக்ரம்
Byமாலை மலர்1 March 2018 1:07 PM IST (Updated: 1 March 2018 1:07 PM IST)
பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் `வர்மா' படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நாளை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Varma #DhruvVikram
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த படத்திற்கு `வர்மா' என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நாளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக நடிகர் விக்ரமுடன், `வர்மா' படக்குழு நேபாளம் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துருவ் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கவும், நாயகி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி அர்ஜுன் ரெட்டி படத்தில் நாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா, சமீபத்தில் சென்னை வந்ததாகவும், வர்மா படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து துருவ்விடம் பேசிவிட்டு சென்றதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று படக்குழு தெரிவித்துள்ளது.
பாலா இயக்கும் இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். #Varma #DhruvVikram
Next Story
×
X