என் மலர்
சினிமா
அவரோட ஆக்ஷன் ரொம்ப அழகா இருக்கும் - ஆர்யா
டெர்மினேட்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்யா, அவரோட ஆக்ஷன் ரொம்ப அழகா இருக்கும் என்று கூறினார்.
டெர்மினேட்டர் படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய டெர்மினேட்டர் படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் அர்னால்ட். இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களை ஜேம்ஸ் கேமரான் இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் டெர்மினேட்டராக அர்னால்ட் மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை பாக்ஸ் ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.
இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு பேசினார்.
ஆர்யா பேசும்போது, ‘டெர்மினேட்டர் உலகம் முழுக்க பேமஸ். அவரோட டிரெயலரை நான் வெளியிடுவது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரோட பயங்கர பேன். அவரோட எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.
ஜிம் போற எல்லாருக்கும் அவர தெரியும். ஸ்டார இருக்கறதால மட்டும் அவர் பேமஸ் கிடையாது இப்ப வரைக்கும் அவரோட பேமஸுக்கு அவரோட பாடி பிஸிக் தான் காரணம். அப்பவே அவர் 7 முறை உலக அழகன் பட்டம் வாங்கிட்டார். இன்னும் 100 வருஷம் அவரோட புகழ் இருக்கும். ஆக்ஷன் பண்ணும்போது அவ்வளவு அழகா இருக்கும். உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.
நவம்பர் 1ம் தேதி படம் வருது. இங்க அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு. எல்லோரும் பாருங்க எஞ்சாய் பண்ணுங்க’ என்றார்.
Next Story