என் மலர்
சினிமா
X
விதார்த்தோடு இணைந்து நடித்த கார்
Byமாலை மலர்4 Jan 2021 8:19 PM IST (Updated: 4 Jan 2021 8:19 PM IST)
மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான விதார்த், அடுத்ததாக நடித்திருக்கும் படத்தில் காரும் இணைந்து நடித்து இருக்கிறது.
செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ஆற்றல். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. இந்தப்படத்தில் விதார்த்தோடு இணைந்து ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம்.
இப்படம் குறித்து இயக்குனர் கே எல் கண்ணன் கூறும்போது, ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும், டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும் என்பதை இந்தப்படம் பேசுகிறது.
படம் முழுக்க ஒரு காரை ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து அதை ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம், படம் பார்ப்பவர்களுக்கு இது புதுமையாக இருக்கும், ஒரு கார் எப்படி நடித்திருக்கமுடியும் என்பவர்களுக்கு படம் பார்க்கும்பொழுதுதான் தெரியும் என்றார்.
படத்தில் வில்லனாக வம்சி கிருஷ்ணா, கதாநாயகியாக ஸ்ரிதா, மற்றும் சார்லி முக்கிய கதாபாத்திரத்திலும், வையாபுரி, விக்கி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
Next Story
×
X