என் மலர்
சினிமா செய்திகள்
X
3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேசில் களமிறங்கும் ஜெய்
Byமாலை மலர்11 Dec 2021 2:34 PM IST (Updated: 11 Dec 2021 2:34 PM IST)
பிரபல நடிகர் ஜெய் படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அப்போது கார் ரேசில் களம் இறங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் நடிப்பில் தற்போது பிரேக்கிங் நியூஸ், சிவ சிவா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. நடிப்பதை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் ஜெய்.
கார் ரேஸில் அவ்வப்போது பங்கேற்று வரும் நடிகர் ஜெய், தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஆர்.எப் மற்றும் ஜேஏமோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா ஃபோர் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். மூன்று நாட்கள் போட்டியாக இந்த பந்தயம் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஜெய்யுடைய கார் எண்.6.
3 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கார் பந்தயத்தில் ஜெய் களமிறங்குகிறார். இப்போட்டியில் நடிகர் ஜெய்க்கு எண்ணித்துணிக திரைப்பட குழு ஸ்பான்சர் செய்கிறது. மேலும் இந்த வருடத்தில், அவர் திரைத்துறையில் இசையமைப்பாளாராக அறிமுகமாவது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது அவரது விளையாட்டு வீரர் அவதாரம், அவருக்கு மற்றொரு மகுடமாக அமைந்துள்ளது.
Next Story
×
X