என் மலர்
சினிமா செய்திகள்

X
ஐஸ்வர்யா பிரபாகர்
வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் போட்ட நடிகை.. வைரலாகும் வீடியோ
By
மாலை மலர்10 March 2022 2:12 PM IST (Updated: 10 March 2022 2:12 PM IST)

பிரபல தொகுப்பாளராகவும் நடிகையாகவும் வலம் வந்த நடிகை கர்ப்பத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். பிரபல தொகுப்பாளராக வலம் வந்து அனைவரையும் கவர்ந்தார். இவர் நன்கு நடனம் ஆடத்தெரிந்தவர் என்பதால் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. லொள்ளு சபா ஜீவாவுடனும் நடிகர் சிவகார்த்திகேயனுடனும் ஜோடியாக நடனமாடினார்.

ஐஸ்வர்யா பிரபாகர்
இவருக்கு 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்து, வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் போது நடனம் ஆடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில், ”நான் நடனக் கலைஞராக இருப்பதால், கர்ப்பமாக இருந்தபோது மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தேன். பெண்கள் ஆரோக்கியமாக இருக்க எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். ஐஸ்வர்யா கர்ப்பக்காலத்தில் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
×
X