search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரீமா கல்லிங்கல்
    X
    ரீமா கல்லிங்கல்

    "குட்டைபாவடை விவகாரம்" பிரபல நடிகை மீது விமர்சனம்

    "குட்டைபாவடை விவகாரம்" பிரபல நடிகை மீது சமூக வலைதளங்களில் விமர்சனமும் ஆதரவும் எழுந்து வருகிறது.
    கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட விழா (RIFFK) நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற திறந்தவெளி அரங்கில் கலந்து கொண்ட நடிகை ரீமா கல்லிங்கல் குட்டை பாவடை (மினி ஸ்கர்ட்) அணிந்து வந்து கலந்து கொண்டார். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சங்களை எழுப்பினர்.

    ரீமா கல்லிங்கல்
    ரீமா கல்லிங்கல்

    விழாவில் அவர் பேசும் போது சினிமா துறையில் நிலவும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசினார். கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் திரைத்துறையில் பணியாற்றுபவர்களின் புகார்களுக்கு தீர்வு காணும் அமைப்பு இல்லை என்பது நம்பமுடியாதது என்று அவர் கூறினார்.

    ரீமா கல்லிங்கல்
    ரீமா கல்லிங்கல்

    ரீமா கல்லிங்கலுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் பல மலையாள நடிகைகள் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பிற பிரபலங்கள் நடிகைக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தமிழில் ‘யுவன் யுவதி’ படத்தில் கதாநாயகியாக நடித்து மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக ரீமா கல்லிங்கல் உள்ளார். கேரளாவில் நடிகை மீதான பாலியல் தொல்லை சம்பவத்தையடுத்து நடிகைகள் ரீமா கல்லிங்கல், மஞ்சுவாரியர், பூ பார்வதி, ரம்யா நம்பீஸன் உள்ளிட்ட பல நடிகைகள் இணைந்து பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர்.
    Next Story
    ×