என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![பிரணிதா பிரணிதா](https://img.maalaimalar.com/Articles/2022/Apr/202204111717223256_Tamil_News_Tamil-cinema-famous-actress-shares-pregnant-images_SECVPF.gif)
X
பிரணிதா
கர்ப்பமானதை பகிர்ந்த பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்
By
மாலை மலர்11 April 2022 5:17 PM IST (Updated: 11 April 2022 5:17 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சூர்யா, கார்த்தி உள்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
சூர்யா நடித்த ’மாசு’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் சமீபத்தில் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஊரடங்கு காலத்தில் அவருடைய திருமணம் இரு வீட்டாரின் மிகச் சிலர் மட்டுமே கலந்து கொண்டு நடைப்பெற்றது.
![கணவருடன் பிரணிதா கணவருடன் பிரணிதா](https://img.maalaimalar.com/InlineImage/202204111717223256_1_pranita._L_styvpf.jpg)
கணவருடன் பிரணிதா
இந்நிலையில் நடிகை பிரணிதா அவருடைய கணவரின் பிறந்தநாளில் அவர் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். விரைவில் தங்கள் வீட்டில் ஒரு தேவதையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று பதிவிட்டு பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
X