என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' .
- இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
தக் லைஃப் போஸ்டர்
இந்நிலையில், 'தக் லைஃப்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
Welcome onboard to the magnificent ensemble of Thug Life.#JojuGeorge @Gautham_Karthik
— Red Giant Movies (@RedGiantMovies_) January 10, 2024
#Thuglife #Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @abhiramiact #Nasser @MShenbagamoort3 @RKFI… pic.twitter.com/MwLl4OlPZ3
- சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'.
- இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. இதனை படக்குழு காமெடியான வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Exciting news.!! Tomorrow, the laughter ride begins! My next project, Vadakkapatti Ramasamy, unveils its trailer. Join me on this hilarious journey where superstitions meet reality. Don't miss out on the fun—stay tuned!#VadakkupattiRamasamy@karthikyogitw @akash_megha… pic.twitter.com/gJfjSAWty5
— Santhanam (@iamsanthanam) January 10, 2024
- நயன்தாரா நடிகையாகவும் தொழிலதிபராகவும் உள்ளார்.
- இவர் '9 ஸ்கின்', ’ஃபெமி 9’ நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
நடிகை நயன்தாரா நடிப்பு மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் '9 ஸ்கின்' (9 Skin) என்ற அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, 'ஃபெமி 9' (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். இதன் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, "மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, இன்னும் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் போய் சேரவில்லை என நினைக்கிறேன். இதற்கு முன்பு எந்த சானிட்டரி நாப்கினுடைய பெயரையும் நாம் சொன்னது கிடையாது. ஆனால் இன்றைக்கு ஒரு மேடையில் இவ்ளோ ஆண்கள், நிறைய பெண்கள் இருக்கும் இடத்தில், அனைவரின் முன்னாடி சானிட்டரி நாப்கின் என்று சொல்றோம். அதுவே மிகப்பெரிய மாற்றம். 'ஃபெமி 9' நிறுவனத்தின் நோக்கமே மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் போய்ச் சேர வேண்டும். அதற்கு தேவையான சுகாதாரம் நிறைந்த சானிட்டரி நாப்கின் கொடுக்க வேண்டும்" என்றார்.
- மகேஷ் பாபு நடித்துள்ள திரைப்படம் 'குண்டுர் காரம்'.
- இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குண்டுர் காரம்'. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'குண்டுர் காரம்' திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். ஆனால் ரசிகர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு நாற்காலிகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதை பார்த்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடியடி நடத்தினர். கூட்ட நெரிசலில் பழைய குண்டுர் காவல் நிலையத்தின் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கட ராவின் கால் முறிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர் சூர்யா.
- இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தன் தேர்ந்த நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இப்படத்தின் முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமான பாடகி 'தீ'யுடன் தொடங்கி இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 'சூர்யா 43' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை நஸ்ரியா இப்படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது.
- விஜயகாந்த் பிரபலமாக இருந்த காலத்தில் விஜய், சூர்யா ஆகியோரின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
- இவர் சிறந்த மனிதர் என்றும் மக்களிடம் பெயர் எடுத்தவர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். சிறந்த நடிகர் என்று மட்டுமல்லாமல் சிறந்த மனிதர் என்றும் மக்களிடம் பெயர் எடுத்தவர். இவர் பிரபலமாக இருந்த காலத்தில் விஜய், சூர்யா ஆகியோரின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உதவி செய்துள்ளார்.
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இந்த படம் இவருக்கு நினைத்த அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.
இந்நிலையில், சண்முக பாண்டியன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். அதில், "விஜயகாந்த் கதாநாயகர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பைட் பண்ணிருக்கிறார். பாடல் பண்ணிருக்கிறார். அடுத்தவர்களை வளர்த்துவிடுவதில் மிகவும் சந்தோஷப்படுபவர். நானும் அவருடன் 'கண்ணுபட போகுதயா' படத்தில் மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு கொரியோகிராஃப் செய்திருக்கிறேன். ரொம்ப அழகாக ஆடியிருப்பார். என்னை நிறையவே ஊக்கப்படுத்தியிருக்கிறார்.
இவ்வளவு உதவி செய்த மனிதனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நாம் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் விஜயகாந்த் அண்ணன் மீது, அந்த அன்பை அவரது மகன் படத்தின் ரிலீஸின் போது அதற்கு ஒரு நல்ல ஓபனிங் கொடுக்க வேண்டும். அதற்கு எவ்வளவு பப்ளிசிட்டி முடியுமோ அதை நான் செய்வேன். அந்த படக்குழுவினர் சம்மதித்தால் அந்த படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயாராகவுள்ளேன். விஜயகாந்த் எத்தனையோ கதாநாயகர்களை வளர்த்துவிட்டிருக்கிறார். அவர் மகன் வளர்வதை நாம் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சண்முக பாண்டியன் தம்பியும் நானும் நடிப்பது போன்று கதை இருந்தால் சொல்லுங்கள்" என்று பேசினார்.
I'm happy to share with you all that I'm ready to do a cameo role in captain sir's Son Shanmuga Pandian's movie as my respect and love for Vijayakanth sir ?? pic.twitter.com/zIlNBqnVs2
— Raghava Lawrence (@offl_Lawrence) January 10, 2024
- கே.ஜே.யேசுதாஸ் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
- இவர் 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அது மட்மின்றி மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாடகர் ஜேசுதாசுக்கு இன்று 84-வது பிறந்தநாள் ஆகும்.
இந்த ஆண்டு தனது பிறந்த நாளில் கேரளாவில் இருக்க ஜேசுதாஸ் விரும்பினார். ஆனால் அமெரிக்காவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக அவர் அங்கு சென்றிருக்கிறார். இதன் காரணமாக அவர் நினைத்தபடி தனது பிறந்தநாளில் கேரளாவில் இருக்க முடியாமல் போனது.
இருந்தபோதிலும் அவர் தனது பிறந்தநாளை ஆன்லைன் மூலமாக ரசிகர்களுடன் கொண்டாடினார். அவர் ஆன்லைனில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி, கேக் வெட்டினார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜேசுதாசுக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் மற்றும் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
- விஜய் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'தி கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவளத்தில் பிரம்மாண்ட வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு இந்த மாதம் இறுதி வரை கோவளத்தில் நடைபெறும் என்றும் அதன் பின்னர் ராஜஸ்தானில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை கண்டு ஆர்ப்பரித்த ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்தார். தாடி, மீசை எதுவும் இல்லாமல் இளைஞர் போன்று விஜய் இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
- இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' படக்குழு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், "கேப்டன் மில்லர் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதற்காக நாங்கள் தமிழ்நாடு அரசிற்கு மிகவும் தாழ்மையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- நடிகர் விஜய் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு', 'லியோ' போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' (The Greatest Of All Time) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் 'வாரிசு' படப்பிடிப்பின் போது கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய நடிகர் விஜய், பாடலாசிரியர் விவேக் அடித்த சிக்சரை வெறும் பவுண்டரி என எதிர் அணியினர் சொன்னதுமே, நீயும் அதே இடத்துல தான் அடிச்சு சிக்சர்ன்னு சொன்ன, இதுவும் சிக்சர் தான் என செல்ல சண்டை போடுகிறார். இந்த வீடியோவை பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.
- இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அச்சமே அச்சமே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் வரிகள் எழுதி பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- ஆக்ஷன் ஹீரோவாக பல வெற்றி படங்களில் நடித்தவர் சுரேஷ் கோபி
- பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சரும் பங்கேற்கலாம் என தெரிகிறது
மலையாள திரையுலக முன்னணி நடிகர்களாக பல தசாப்தங்களாக இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால்.
ஆனால், 90களில் அவர்கள் இருவருக்கும் இணையாக பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற முன்னணி ஹீரோ சுரேஷ் கோபி. ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களிலும், குணசித்திர வேடங்களில் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுரேஷ் கோபி.
65 வயதாகும் அவர், சில வருடங்களாக நடிப்பதை குறைத்து கொண்டு அரசியலில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
2016ல் ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக பாராளுமன்றம் சென்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேரளாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சுரேஷ் கோபி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்.
சுரேஷ் கோபியின் மகளான பாக்யாவிற்கும் தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவின் புகழ் பெற்ற இந்து கோயிலான குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் வரும் 17 அன்று திருமணம் நடைபெற உள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரம் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் (Greenfield Stadium) ஜனவரி 20 அன்று நடைபெறும்.
இந்நிலையில், தங்கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்குமாறு சுரேஷ் கோபி தனது குடும்பத்தினருடன் சென்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் வைத்தார்.
இதையடுத்து, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
முன்னதாக மோடி, காலை 08:00 மணியளவில் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பிறகு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கொச்சி செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திருமணத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.
திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகர் சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் என சில நாட்களாக செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடித்த "தீனா", சரத்குமார் நடித்த "சமஸ்தானம்", விக்ரம் நடித்த "ஐ" உட்பட பல தமிழ் படங்களிலும் நடித்தவர் சுரேஷ் கோபி.