என் மலர்
சினிமா செய்திகள்
- தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
- இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது, சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தகுந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 'கேப்டன் மில்லர்' படத்தை 1166 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டதுடன், தகுந்த நடவடிக்கைகளை தனியார் மற்றும் அரசு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.
- ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
- இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தின் டிரைலரில் கூட கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுப்பதையும், அப்போது ரஜினிகாந்த் அறிமுகமாகி 'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க. குழந்தைகள் மனசுல கூட விஷத்தை விதைச்சிருக்கீங்க. தப்பா போகுது' என்று ஆவேசமாக பேசும் வசனம் கவனம் ஈர்த்தது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
லால் சலாம் போஸ்டர்
இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்திலும் சற்று குழப்பத்திலும் உள்ளனர்.
- 'கேப்டன் மில்லர்' திரைப்படம் 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் தனுஷ் நடித்தது குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், "படத்தில் ரொம்ப எமோஷனலான மூன்று காட்சிகள் உள்ளது. அவ்வளவு ஆழமாக நான் காட்சிகள் இதுவரை எடுத்ததில்லை. இந்த காட்சி செய்யும் போது தனுஷ் எப்படி செய்வார் என்று நினைத்தேன்.
ஆனால் அவர் மிகவும் எளிமையாக நடித்துவிட்டார். எனக்கு அப்போது இந்த காட்சியை பார்க்கும் பொழுது விருப்பமே இல்லாமல் தனுஷ் நடித்த மாதிரி இருந்தது. ஆனால், எடிட்டிங்கில் பார்க்கும் பொழுது மிகவும் அருமையாக இருந்தது. ஒரு சில காட்சிகள் 'அசுரன்', 'மயக்கம் என்ன' போன்ற படங்கள் மாதிரி நடித்திருப்பார். எமோஷனலான காட்சிகள் தனுஷிற்கு மிகவும் பிடித்தது" என்று பேசினார்.
- விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து நடிகர் விஷால், விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், "இந்த வீடு எனக்கு புதிதல்ல. நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக வெற்றி பெற்று இந்த வீட்டிற்கு வரும் போது பிரேமலதா அம்மா சொன்னது விஷயம் இன்னும் காதில் ஒலிக்கிறது.
விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் பத்திரத்த மீட்டு வரும் பொழுது ஒரு குழந்தை போன்று லாக்கரில் உள்ள உன் நகைகளை எடு பத்திரத்தை வைக்க வேண்டும் என்று சொன்னது காதில் ஒலிக்கிறது. ஒரு நடிகராக மட்டுமல்ல ஒரு மனிதனாக பெயர் வாங்குவது கடினம். விஜயகாந்த் என்ற வார்த்தை அடி வயிற்றில் இருந்து ஒவ்வொருவரும் கூறுவார்கள். அந்த வயிற்றை நிரப்பும் சாமி விஜயகாந்த். எத்தனையோ லட்சம் பேருக்கு அவர் சாப்பாடு போட்டுள்ளார்" என்று பேசினார்.
மேலும், விஜய் மீது செருப்பு வீசியது குறித்த கேள்விக்கு, "கூட்டம் இருக்கும் பொழுது யார் செருப்பை எடுத்து அடித்தார்கள் என்று நாம் யோசிக்க முடியாது. அதையும் தாண்டி ஒரு நடிகர் அவருக்கு பிடித்த நடிகர், கலைப்பயணத்தில் அவரின் முக்கியமான தூணாக இருந்த நடிகரை பார்க்க வந்திருக்கிறார். அதனால் அதை தவிர்த்திருக்கலாம். ஆனால், அவ்வளவு பெரிய கூட்டத்தில் என்ன நடக்குது என்று யாருக்கும் தெரியாது" என்று பேசினார்.
- பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'.
- இந்த படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் தமிழ் பதிப்பினை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் தேஜா சஜ்ஜா பேசியதாவது, ஹனுமான் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. இது தெலுங்குப்படமல்ல, நேரடித்தமிழ் படம் மாதிரி தான் இருக்கும். அதற்காக நிறைய உழைத்துள்ளோம். இப்படத்தை மிகப்பெரிய படமாக்கத் தயாரிப்பு தரப்பில்,சைத்தன்யா மேடம், நிரஞ்சன் சார் மிகப்பெரிய ஆதரவைத் தந்துள்ளார்கள். டிரைலரில் படத்தின் தன்மை உங்களுக்குத் தெரியும். படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். சக்தி பிலிம் பேக்டரி இப்படத்தை வெளியிடுகிறார்கள் அவர்களுக்கு எனது நன்றி.
இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை,"அஞ்சனாத்ரி" என்ற உலகை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளோம். ஒரு பையனுக்கு அனுமனின் சக்தி கிடைப்பது தான் கதை. வினய், வரலட்சுமி, அம்ரிதா என எல்லோரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. நம் தென்னிந்தியக் கலாச்சாரத்தில், பொங்கலுக்கு 4,5 படங்கள் பார்க்கும் வழக்கம் இருக்கிறது, அது போல் இந்தப் பொங்கலுக்கு எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள். இது ஓடிடியில் பார்க்கும் படமல்ல திரையரங்கில் அனுபவிக்க வேண்டிய படம் என்று பேசினார்.
- சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.
- பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, 'கேம் சேஞ்சர்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவரின் உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. இதையடுத்து சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார்.
நடிகை அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் உலா வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இருவரும் பிரேக் அப் செய்ததாக செய்திகள் வெளியானது. தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, 'கேம் சேஞ்சர்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை அஞ்சலி தன்னை பற்றி பரவி வரும் திருமண வதந்திகள் குறித்து நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி என்ன எழுத வேண்டும், யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில் நடிகர் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது. பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதாக சொல்லப்பட்டது. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனதை நினைத்து நான் சிரித்தேன்" என்று கூறியுள்ளார்.
- விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஷால், "தமிழ் திரையுலகில் ஒரு மிக சிறந்த நடிகர். கலையுலகத்தில் மட்டுமல்ல பொது மக்களிடம் சிறந்த மனிதர் என்று பெயர் வாங்கிய ஒருவர். ஒரு நல்ல அரசியல்வாதி. விஜயகாந்தின் தைரியம், உழைப்பு ஆகியவற்றை முன்னுதாரணமாக வைத்து தான் நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம்.
விஜயகாந்தின் அலுவலகத்தில் எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும். எல்லோரையும் சரிசமமாக பார்க்கும் மனிதன் கேப்டன் (விஜயகாந்த்) மட்டும் தான். அவரது மறைவு அன்று நான் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது. ஒரே ஒரு விஷயம் தான் நான் அவரை பார்த்து சொன்னேன் மன்னித்துவிடு சாமி. நான் அவரது கடைசி நேரத்தில் இருந்திருக்க வேண்டும், ஆனால் என்னால் முடியவில்லை. விஜயகாந்த் குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.
- எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’.
- இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் 'இமெயில்'. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக 'முருகா' அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.
இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.
இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது, சிறு பட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தயாரிப்பாளர் ராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நானும் கூட அவ்வப்போது இதுபற்றி கூறி வருகிறேன். ஒரு வளாகத்தில் நான்கு திரையரங்குகள் இருந்தால் அதில் ஒன்றை கட்டாயம் சிறுபட வெளியீட்டுக்காக கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே கொண்டு வர வேண்டும். நிறைய திரையரங்குகள் கொடுத்தால் தானே மக்கள் வந்து படத்தை பார்த்து பாராட்டுவார்கள். இந்த படத்தின் நாயகன் அசோக் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. ரொம்பவே கொடுத்து வைத்தவர். படத்தில் அவரது காட்சிகளை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் சண்டை காட்சிகளை நன்றாக நடித்துள்ளார்.
படம் முடியும்போது இந்த படத்தின் தயாரிப்பாளரை தனிமரமாக விட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள். கட்டாயம் சோதனைகள் வரும். சோதனை வந்தால் தான் நல்லது. அதையெல்லாம் தாண்டி தான் சந்தோசத்தை அனுபவிக்க முடியும். இமெயில் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் பேப்பரில் தான் எழுதி அனுப்பி கொண்டிருந்தோம். இமெயில் வந்த பிறகு பேப்பரின் தேவை குறைந்து விட்டது. அதனால் மரங்களை வெட்டுவதும் குறைந்து இயற்கையும் பாதுகாக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல நிறைய இளைஞர்கள் செருப்படியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல லவ் லெட்டர் கொடுத்து, அந்தப் பெண் உடனே கோபமாகி செருப்பை கழட்டுவார். இந்த இமெயில் வந்தவுடன் அந்த அவசியம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு மட்டுமல்ல. சில பெரிய மனிதர்களிடம் கூட தடுமாற்றம், பயம் காரணமாக நாம் சொல்ல முடியாத விஷயங்களை சொல்வதற்கு இந்த இமெயில் உதவுகிறது.
ஆன்லைனில் தான் மோசடி நடக்கிறது என்றில்லை. ராஜன் சார் சொன்னது போல படப்பிடிப்பு நடித்த அனுமதி வாங்கி சென்றாலும் அந்த இடத்தில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்பார்கள்.. அங்கே ஒரு தனி யூனியன் வைத்திருப்பார்கள்.. அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். அந்த மாதிரி கண்ணுக்கு தெரிந்து நிறைய மோசடிகள் நாட்டில் நடக்கிறது. தனி மனிதனாக பார்த்து திருந்தினால் மட்டுமே போன்ற மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறையும் என்று கூறினார்.
- கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ்.
- இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' படத்தில் நடித்தவர் நடிகர் யஷ். இவருக்கு என்று கர்நாடகாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதையடுத்து நேற்று அவரது 38-வது பிறந்த நாளை யொட்டி கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற இடத்தில் கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நடிகர் யஷ் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். உங்களின் அன்பை சமூக வலைதளங்களில் செல்போனில் காண்பித்தால் கூட போதும், மனதில் இருந்தால் போதும். கட் அவுட் வைத்து அதனை வெளிப்படுத்த வேண்டாம். இது போன்று எதிர்காலத்தில் யாரும் செயல்பட வேண்டாம் முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று அறிவுரையும் கூறினார்.
இதற்கிடையே மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.
- தமிழில் இவர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
- இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின.
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான இவர் தற்போது பல மொழிகளிலும் பெரிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், பிப்ரவரி மாத துவக்கத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.
ஏற்கனவே இந்த ஜோடி டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், நிச்சயதார்த்தம் குறித்த தகவல் வேகமாக வைரல் ஆனது. அதன்படி நிச்சயதார்த்தம் குறித்து வைரலாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
- ‘காலணித் திருவிழா 2024’ நிகழ்ச்சியை நடிகை ரித்திகா சிங் இன்று துவக்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
சென்னையில், பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் 'காலணித் திருவிழா 2024' என்னும் நிகழ்ச்சியை பிரபல நடிகையும் தற்காப்பு கலைஞருமான ரித்திகா சிங் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் மாலில் கூடியிருந்த மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த அவர் அங்குள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் பேசினார். அவரது வருகையால் அந்த கடையின் உரிமையாளர்களும், விற்பனையாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ரித்திகா சிங், "நான் விளையாட்டை விடமாட்டேன். என் வாழ்க்கையில் சினிமாவிற்கும் விளையாட்டிற்கும் ஒரே அளவு முக்கியத்துவத்தை கொடுப்பேன். பெண்கள் பலர் விளையாட்டிற்கு வரவேண்டும். இது உங்களை உடலளவிலும் மனதளவிலும் வலிமையாக்கும். இதனால் நீங்கள் அதிக வலிமை கொண்டவர்களாக மாறுவீர்கள்" என்று பேசினார்.
மேலும், ரஜினி சார் ஒரு லெஜண்ட் என்று கூறினார். ஞான்வேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' திரைப்படத்தில் ரித்திகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் ’தேவரா’.
- ’தேவரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் 'தேவரா'. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கையில் ரத்த கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக ஜூனியர் என்டிஆர் நிற்கும் 'தேவரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தேவரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், 'இந்த கடல்ல மீன விட அதிகமா ரத்தமும் கத்தியும் கொட்டி கிடக்கு. அதுனால் தான் இதுக்கு பெயரு செங்கடல்' என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இதனால் வைபான ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.