search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரிலீசுக்கு ரெடியான கேப்டன் மில்லர்- தடை விதித்த நீதிமன்றம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ரிலீசுக்கு ரெடியான கேப்டன் மில்லர்- தடை விதித்த நீதிமன்றம்

    • தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
    • இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.


    இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது, சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தகுந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.


    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 'கேப்டன் மில்லர்' படத்தை 1166 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டதுடன், தகுந்த நடவடிக்கைகளை தனியார் மற்றும் அரசு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×