search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மிக பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் பெப்சி உமா.
    • இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அதனை மறுத்துவிட்டார்.

    தமிழ் சினிமாவில் நடிகர்களை தாண்டி ஒரு சில தொகுப்பாளர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தான் பெப்சி உமா என்ற உமா மகேஸ்வரி. 15 வருடங்களாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இவர்.


    அந்த நாட்களில் இவரின் நிகழ்ச்சியில் ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்று தவம் இருந்த ரசிகர்கள் ஏராளம். இப்படி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்த பெப்சி உமாவிற்கு சினிமாவில் இருந்து பல வாய்ப்புகள் வந்தும் அதையெல்லாம் அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

    ரஜினியை அவரின் இரண்டு படங்களில் நடிக்க பெப்சி உமாவை கேட்டும் அவர் மறுத்துவிட்டாராம். அதுமட்டுமல்லாமல் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பையும் தவிர்த்துவிட்டாராம். இப்படி தொகுப்பாளினியாக மட்டும் இருந்து பிரபலமான பெப்சி உமா நேர்காணல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    அதில், "இதை நான் எங்கும் சொன்னது இல்லை. இது ராக்கிங் மாதிரி இருக்கும். ரஜினிகாந்த் ஒரு முறை என்னை தொடர்புகொண்டுஉங்க பக்கத்துல எந்த பிரபலம் இருந்தாலும் கண்ணு அங்க போகாம உங்க பக்கமே போகிறது" என்று சொன்னதாக கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதற்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் செய்தது குறித்து ரம்பா பேசிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாயாண்டி குடும்பத்தார்'.
    • இந்த படம் சிறந்த படங்களுக்கான தமிழக அரசின் விருதில் இரண்டாம் பரிசை வென்றது.

    மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாயாண்டி குடும்பத்தார்'. இந்த படத்தில் சீமான், தருண் கோபி, சிங்கம் புலி, மயில் சாமி, மணிவண்ணன், பொன்வண்ணன், ரவிமரியா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் (UnitedArts) நிறுவனம் தயாரித்திருந்தது. குடும்பக்கதையையும், பங்காளிச் சண்டையையும் மிகவும் நேர்த்தியாக வெளிக்காட்டிய இந்த படம் 2009-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான தமிழக அரசின் விருதில் இரண்டாம் பரிசையும் பெற்றது.



    இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் (UnitedArts) நிறுவனம் 2-ம் பாகத்தை தயாரிக்க உள்ளதாகவும், கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி. ஜெகன் படத்தை இயக்க உள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


    இயக்குனர் கே.பி.ஜெகன் 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படத்தில் மாயாண்டி கதாபாத்திரத்தின் மகன்களின் ஒருவராக நடித்திருந்தார். மேலும் இவர் விஜய்யின் புதிய கீதை, கோடம்பாக்கம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.


    • அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணே செல்ல கண்ணே' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரவி.ஜி, உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார்.
    • நடிகை அமலாபால் தனது நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார்.

    சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.


    இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சமீபத்தில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்தார் இது தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து நடிகை அமலாபால் தனது நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மிக எளிமையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.


    அமலாபால்- ஜெகத் தேசாய் ஜோடிக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அமலாபால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் அமலா பாலுக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28-ந்தேதி காலமானார்.
    • வருகிற ஜன.19-ந்தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெறு

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவினால் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    நினைவிடத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் நினைவிடத்திற்கு நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விஜயகாந்த் மறைவையொட்டி நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19-ந்தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும்.

    புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை பற்றி அன்று நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    அரசுக்கும் சில கோரிக்கைகள் வைக்க இருக்கிறோம். அவர் ஒரு நல்ல ஆளுமை. நடிகர் சங்க தலைவராக இருக்கும்போது பல சவால்களை சந்தித்து சாதித்துள்ளார்.

    எந்த வேலை என்றாலும் முன்னின்று செய்வார். அவரது புகழ் என்றும் ஓங்கி நிலைத்திருக்கும். நம்மிடம் அவர் இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

    வருங்கால முதலமைச்சராக வேண்டியவர் விதி வசத்தால் போய்விட்டார். அவருடன் நான் சில படங்களில் நடித்திருக்கிறேன். கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மெரினா அரங்கத்தில் கலைஞருக்கு மிகப்பெரிய விழாவை விஜயகாந்த் எடுத்தார்.

    விழாவில் 3½ லட்சம் பேர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கலைஞர் இன்னும் கொஞ்சம் தூரம் நீங்கள் என்னை கடந்து சென்றுவிட்டால் நான் முதலமைச்சராகி விடுவேன் என்றார். அவ்வாறே 1 மாதத்தில் கலைஞர் முதலமைச்சர் ஆனார். மலேசியாவில் கமல், ரஜினி உள்பட தமிழ் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நட்சத்திர விழாவின் மூலம் நடிகர் சங்க கடனை அடைத்தார். அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறினார்.

    • ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ரெபெல்'.
    • இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ரெபெல் போஸ்டர்

    இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ஜி.வி.பிரகாஷ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • அனிமல் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்தது
    • நானே எழுதுவதால் கதை சொல்லவே எனக்கு பல நாட்கள் ஆகும் என்றார் சந்தீப்

    கடந்த 2023 டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா, இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" உலகளவில் வெளியானது.

    அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்திருந்தனர். மிக பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்தது.

    இதை தொடர்ந்து, இயக்குனர் சந்தீப் ரெட்டி, "ஸ்பிரிட்" எனும் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இதில் "பாகுபலி" திரைப்பட கதாநாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தனது விருப்பங்கள் குறித்து சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்ததாவது:

    சிரஞ்சீவி மற்றும் ஷாருக் ஆகியோரை இயக்க விரும்புகிறேன். அவர்கள் எனக்கு கனவு நாயகர்கள். எப்போது இயக்குவேன் என தெரியாது, ஆனால் நிச்சயம் அவர்களை வைத்து திரைப்படம் இயக்குவேன்.

    பலருடன் இணையாமல் நானே கதை எழுதுவதால் எனக்கு ஒரு நடிகரிடம் கதை சொல்லவே பல மாதங்கள் ஆகிறது.

    சிரஞ்சீவி, ஷாருக் ஆகியோரை ஈர்க்கும் நல்ல அழுத்தமான கதையுடன் எவராவது என்னிடம் முன்வந்தால் உடனே இயக்கவும் தயாராக உள்ளேன். அவ்வாறு கதை கிடைத்தால் 9 மாதங்களில் படத்தை முடித்து விடுவேன்.

    இவ்வாறு சந்தீப் கூறினார்.

    • 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா.
    • இவர் இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்தியா முழுதும் வலம் வந்தார்.

    வெள்ளித் திரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் என முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார்.

    தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா. 1993- ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்தியா முழுதும் வலம் வந்தார்.


    இந்நிலையில், நடிகை ரம்பா 'அருணாச்சலம்' படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினி செய்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "அருணாச்சலம் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடிகர் ரஜினியை பார்க்க சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் வந்திருந்தனர். சல்மான் கான் உடன் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்துள்ளேன். அதனால் அவரை பார்த்ததும் மும்பையில் வழக்கமாக ஹீரோக்களை பார்த்தால் கட்டிப்பிடிப்பது போன்று கட்டிப்பிடித்தேன்.


    இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் செட்டில் திடீரென டென்ஷன் ஆகிவிட்டார். எல்லோரும் ரஜினியை பார்க்கின்றனர். அப்படியே திரும்பி என்னை பார்க்கின்றனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன்பின்னர் ரஜினி செட்டில் இருந்த அனைவரையும் வர சொல்லி ரம்பா, சல்மான்கானுக்கு எப்படி வணக்கம் வைத்தார். நமக்கு எப்படி வணக்கம் வைத்தார் என நடித்து காட்டினார். மேலும், தென்னிந்தியர்கள் எல்லாம் என்ன இளிச்சவாயனுங்களா, உங்க ஆட்களுக்கு மட்டும் கட்டிப்புடிச்சு வணக்கம் வைப்பீங்களா எனக் கேட்டார்.


    இன்னொரு நாள் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் மின்விளக்குகள் அணைந்துவிட்டன. அப்போது யாரோ என் முதுகில் தட்டிவிட்டு போனது போல இருந்தது. உடனே கத்திவிட்டேன். லைட் மீண்டும் வந்தவுடன் ரம்பா பின்னாடி தட்டினது யாருடா என ரஜினி சாரே ஒரு பஞ்சாயத்து டிராமா போட்டார். அப்படித்தான் செட்டில் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பார்" என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகை துஷாரா விஜயன் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    • இவர் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'போதை ஏறி புத்தி மாறி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.


    பின்னர் மீண்டும் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். அடுத்ததாக 'கழுவேத்தி மூர்க்கன்', 'அநீதி' போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வரும் துஷாரா விஜயன் தற்போது தனுஷ் இயக்கும் 50-வது படத்தையும் ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.



    இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் துஷாரா விஜயன், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை துஷாரா தனது சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.
    • தமிழக அரசு சார்பில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.

    கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன. லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


    தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.1000 என வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


    இந்நிலையில், நடிகர் பிரசாந்த், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதற்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

    • 'விடாமுயற்சி' திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார்.
    • இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் சத்தமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல சென்னை விமான நிலையம் வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.


    இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஒன்றில் பெண் ரசிகை ஒருவருடன் இவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு துபாய் கடற்கரையில் ஒரு சொகுசு படகில் குடும்பத்துடன் அஜித் செல்லும் வீடியோவும் ட்ரெண்டானது.


    • நடிகர் சூரி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இயக்குனர் துரை செந்தில்குமார் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.


    இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து சமுத்திரகனி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தம்பி சூரி கதைநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு" என்று குறிப்பிட்டு இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதற்கு ஜெட் வேகத்தில் சூரி படப்பிடிப்பை நிறைவு செய்ததாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    ×