search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஆலம்பனா படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

    கே.ஜெ.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் கொஸ்துப் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டசி காமெடி கதையம்சம் கொண்ட படமாக ஆலம்பனா உருவாகி இருக்கிறது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் உருவாகி இருக்கும் ஆலம்பனா டிசம்பர் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படம் குறித்த நிகழ்ச்சியில் பேசிய வைபவ் படத்தில் உண்மையில் சிரித்து மகிழக்கூடிய வகையில் காமெடி இருக்கும் என்று தெரிவித்தார்.

     


    "இப்படத்தின் கதையை தயாரிப்பு நிறுவனம் சொன்ன போதே, சூப்பராக இருந்தது. யார் ஹீரோ என்றேன் நீ தான் என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது."

    "இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன். பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும் என்னைக் கலாய்த்து விட்டார். படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார்."

    "படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும்," என்று தெரிவித்தார்.

    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.
    • வித்யுத் ஜம்வால் யார் உதவியும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார்.

    பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வருபவர் வித்யுத் ஜமால். இவர் பில்லா 2, அஞ்சான் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் இன்று (டிசம்பர் 10) தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், பிறந்தநாளை ஒட்டி நடிகர் வித்யுத் ஜமால் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

    இமய மலை தொடர்களில் ஒருவார காலம் தான் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கும் வகையில், மூன்று புகைப்படங்களையும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார் என்பது பற்றியும் வித்யுத் ஜம்வால் விளக்கம் அளித்து இருக்கிறார். 14 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் வரை வித்யுத் ஜம்வால் யார் உதவியும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார்.

     


    ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து காட்டு பகுதியில் யார் உதவியும் இன்றி இயற்கையுடன் ஒன்றி இருக்கும் வகையில், வித்யுத் ஜம்வால் ஏழு முதல் பத்து நாட்கள் வரை காட்டு பகுதியில் தனது உடலில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக கழித்து வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு இமய மலை பகுதிகளில் நிர்வாணமாக வசித்துள்ளார்.

    இவ்வாறு செய்யும் போது, தன்னால் இயற்கையுடன் ஒன்றி இருக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படி இருக்கும் போது தனக்கு புதுவித சக்தி கிடைப்பதாகவும், இங்கிருந்து கிளம்பும் போது அந்த சக்தியுடன் வீட்டுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்த அனுபவம் தன்னை புதிதாக பிறந்ததை போன்ற அனுபவத்தை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில், தனது வாழ்க்கையின் அடுத்த பக்கத்திற்கு அவர் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் க்ராக் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 



    • முதல் நாளில் இருந்தே வசூலில் அனிமல் சாதனை புரிந்து வருகிறது
    • அனிமல் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என எம்.பி. விமர்சித்தார்

    கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    உலகளவில் இத்திரைப்படம் வசூலில் ரூ.600 கோடி இதுவரை வசூலித்துள்ளது.

    மிகவும் அதிகமாக வன்முறை காட்சிகள் இடம்பெறுவதாக விமர்சிக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு தொடர்கிறது.

    "நாம் அனைவரும் திரைப்படங்கள் பார்த்துத்தான் வளர்ந்தோம். சமூகத்தின் கண்ணாடியாக விளங்குவது சினிமா. அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு நோய் போன்றவை. எனது மகளும் மேலும் சில குழந்தைகளும் இப்படத்தை காண சென்று பாதியிலேயே திரும்பி விட்டனர். இத்திரைப்படம் ஆணாதிக்கத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கிறது. இதற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு கிடைத்தது?" என பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில எம்.பி.யான ரஞ்சீத் ரஞ்சன் மாநிலங்களவையில் "அனிமல்" திரைப்படம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    • ரெடின் கிங்ஸ்லி கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    • சீரியல் நடிகை சங்கீதா பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. வித்தியாசமான முக பாவனைகளால் சிரிக்க வைக்கும் இவரது காமெடிக்கு ரசிகர் கூட்டம் உள்ளது.

    இவர் கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி., டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், ஏஜண்ட் கண்ணாயிரம், காரி, கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சீரியல் நடிகையான சங்கீதா பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

     

     

    தமிழ் சினிமாவில் தனி கவனம் பெற்று வரும் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துள்ளார். இவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திருமணம் செய்து கொண்டுள்ள ரெடின் மற்றும் சங்கீதா தம்பதிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • வாழ்க்கையில் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன்.
    • இந்த வயதிலும் நான் ஹேப்பியா இருக்கிறேன்.

    நடிகர் பப்லு பிரித்விராஜ் ஏற்கனவே பீனா என்ற பெண்ணை மணந்து, கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு, தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்தார். இருவரும் ஜோடி புறாக்களாக சுற்றி திரிந்தனர்.

    இதற்கிடையில் பப்லு - ஷீத்தல் காதலில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் 'பிரிந்துவிட்டீர்களா' என்ற ரசிகரின் கேள்விக்கு ஷீத்தல் 'லைக்' செய்து சூசகமாக தனது பதிலை அறிவித்தார்.

    இந்தநிலையில் பப்லு, 'வாழ்க்கையில் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். என் பர்சனல் வாழ்க்கையை பர்சனலாக வைக்க தவறிவிட்டேன்', என்று வேதனை தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, 'இந்த வயதிலும் நான் ஹேப்பியா இருக்கிறேன். என்னை போலவே எல்லோரும் ஹேப்பியா இருக்கவேண்டும் என்று நான் குழந்தை தனமாக நினைத்து, வெளியே சொன்ன சில விஷயங்கள் இப்போது எனக்கெதிராகவே திரும்பி இருக்கிறது. அனைவருமே காரி துப்புகிறார்கள்.

    இனியும் என் சந்தோஷத்தை வெளியே சொல்லி நான் எதுக்கு அவமானம் தேடிக்கொள்ள வேண்டும்?

    ஷீத்தலுக்கும், எனக்கும் இடையே என்ன ஆனது? என்பதெல்லாம் என் தனிப்பட்ட விஷயம். இனியும் என் தனிப்பட்ட விஷயத்தை வெளியே பேசமாட்டேன். என்னை பற்றிய கேலி, கிண்டலுக்கு நானே எதுக்கு இனியும் தீனி போட வேண்டும்?' என்று ஆதங்கப்பட்டார்.

    • என்னை பற்றி நன்றாக புரிந்துகொண்டவர் அசோக்.
    • உடல் தோற்றத்தை பற்றி விமர்சிப்பது தவறு.

    நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார். அசோக் செல்வனின் 'சபாநாயகன்' படமும், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள 'கண்ணகி' படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

    இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி பாண்டியன் மனம் திறந்து சில கருத்துகளை தெரிவித்தார். அதில், "திருமணத்துக்கு பிறகு 2 பேருமே நடிப்பில் பிசியாகி விட்டோம். இப்போது நாங்கள் இருவரும் வீட்டுக்குள் இணைந்திருக்கும் நாட்கள் எத்தனை? என்று எண்ணி கொண்டிருக்கிறோம். அந்தளவு பட வேலையில் பிசியாக இருக்கிறோம்.

    என்னை பற்றி நன்றாக புரிந்துகொண்டவர் அசோக். அதேவேளை எனக்கான மரியாதையும் அவர் தருகிறார். நடிப்பு சம்பந்தமாக எங்களுக்குள் இருக்கும் கருத்துகளை தைரியமாகவே பகிர்ந்துகொள்வோம்.

    உடல் தோற்றத்தை பற்றி விமர்சிப்பது தவறு. அப்படி பேசுவோரின் தரமற்ற எண்ணத்தை தான் இது வெளிக்காட்டுகிறது. சிறிய வயதில் எனது தோற்றத்துக்காக நிறைய கலாய்க்கப்பட்டு இருக்கிறேன். நான் குள்ளமாக, ஒல்லியாக இருந்தேன். இன்னொன்று, நான் மிகவும் கருப்பாக இருந்தேன். இதற்கு காரணம் என்னவென்றால் நான் எப்போதுமே வெயிலிலே சுற்றிக்கொண்டிருந்தேன்.

    அந்த சமயங்களில் தன்னுடைய தோற்றத்தை பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வரும்போது பயங்கரமாக அழுவேன். ஆனால் இப்போது யோசித்துப்பார்த்தால், அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் நான் எனக்காகவே பலமாகி இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

    • மழை வெள்ளம் காரணமாக கருணாநிதி நூற்றாண்டு விழா ஜனவரி 6-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறாது.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி நடைபெறும் 'கலைஞர் - 100' என்ற விழா, வருகிற 24-ந்தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது மழை வெள்ளம் காரணமாக இந்த விழா, ஜனவரி 6-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    எனவே ஏற்கனவே விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த 23, 24-ந்தேதிகளில் படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. ஜனவரி 6-ந்தேதி விழா நடைபெறுவதையொட்டி, ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறாது

    மேலும் ஜனவரி 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடன காட்சிகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கட்டாய அவசியம் இருந்தால், சிறப்பு அனுமதி பெற்று பாடல் காட்சிகள் அமைக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டான்ஸ் டான் விழா டிசம்பர் மாதம் 30- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    • நடனக் கலைஞர் ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில் எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    தமிழ் சினிமாவில்  கோலோச்சி நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும் அவர்களை கவுரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா டிசம்பர் மாதம் 30- ஆம் தேதி, காமராஜர் அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடனக் கலைஞர் ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில் எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.


    இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ,ஶ்ரீதர் மாஸ்டர்,  அக்ஷரா ஶ்ரீதர், அசோக் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ்டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹரீஷ் குமார் மாஸ்டர், மாலினி மாஸ்டர், DKS பாபு மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



    1950- களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். இன்றைய நவீன டிஜிட்டல் உலகைப் போல அவர்களைப் பற்றிய அறிமுகங்களோ, விவரங்களோ, அனைவருக்கும் தெரிந்ததில்லை. திரையுலகில் பணியாற்றும் நடனக் கலைஞர்களுக்கே நம் முந்தைய தலைமுறையின் ஆரம்பத்தில் புகழுடன் பணியாற்றிய நடனக் கலைஞர்களின் விவரங்கள் தெரிவதில்லை. நம் தலைமுறையில் நமக்கு முன் சாதித்து காட்டிய நடனக் கலைஞர்களை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைப் பற்றி வரலாற்றில் பதிவு செய்து, அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் இந்த  டான்ஸ் டான் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இவ்விழாவில் தமிழ் திரையுலகில் புகழுடன் பணியாற்றி மறைந்த நடனக் கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை  நினைவு கூர்ந்து, அவர்களின் புகழ் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கவுரவிக்கப்படவுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் நடன கலைஞர்களும் இவ்விழாவில் கவுரவிக்கப்படவுள்ளனர். மேலும் தமிழகத்தின்  38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்படவுள்ளனர்.

    • தமிழ் திரையுலகில் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.
    • பிரபலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இணையத்தில் பெரும் பேசுப்பொருளாக மாறியது.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடைபோட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் விட இந்த முறை நடந்த சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் என களைகட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் பெரும் ஆதரவைப்பெற்றது.



    இந்த முறை நடந்த சீசனில் கலந்துகொண்ட திறமையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சி முடிவடையும் முன்னதாகவே திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் ஶ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வரும் இணைந்து ஒரு அட்டகாசமான பாடாலை பாடியுள்ளனர். நடுவராகக் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தமன் மற்றும் இசையமைப்பாளர் இமான் மூலமும் பல குழந்தைகளுக்கு பாடல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் எனும் பகுதி பலரின் மனதைத் தொட்டது. மிமிக்ரியில் கலக்கிய, எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர்வெடி கோகுல், தன் குரலால் கலக்கிய அக்ஷரா என பாடகர்கள் கலக்கிய தருணங்கள் இணையம் முழுக்க வைரலானது.


    இது தவிர திரைப்பிரபலங்கள் மாரி செல்வராஜ் கலந்துகொண்ட நிகழ்ச்சி, ராதா அவர்கள் கலந்துகொண்ட போது நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இணையத்தில் பெரும் பேசுப்பொருளாக மாறியது.

    பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களால் களைகட்டிய சூப்பர் சிங்கர் ஜீனியர் சீசன் 9 இறுதிப்போட்டி வரும் ஞாயிறு மாலை நேரு உள் விளையாட்டரங்கத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஶ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்ஷரா, அனன்யா, மேக்னா ஆகிய ஃபைன்லிஸ்ட்ஸ் கலந்துகொள்ளும் ஃபைனல்ஸ் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.

    • தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
    • இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


    இந்நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் உறுதி செய்துள்ளது. அதன்படி, ரசிகர் ஒருவர், "தனுஷின் இரண்டு படங்கள் திரையரங்குகளில் ஓடுகிறது. இது கேப்டன் மில்லர் பட வெளியீட்டிற்கான முன்னோட்டமா?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தயாரிப்பு நிறுவனம் 'கேப்டன் மில்லர்' பொங்கலுக்கு வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார்.
    • இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.


    இந்நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில் நிவாரணப் பொருட்களை நடிகர் பாலா வழங்கியுள்ளார். அதாவது, பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு ஆடை மற்றும் உதவித் தொகையை வழங்கியுள்ளார்.

    இதற்கு முன்பு நடிகர் பாலா ரூ.2 லட்சம் செலவில் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • அமீர் நடித்து வரும் திரைப்படம் ‘மாயவலை’.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் அமீர், வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள படம் 'மாயவலை'. வின்சென்ட் அசோகன், சஞ்சனாஷெட்டி, சரண், தீனா, சத்யா உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்துள்ளார்.


    யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ராம் ஜி ஒளிப்பதிவு செய்ய எஸ்.பி.அஹமத் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். 'மாயவலை' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை இயக்குனர் சமுத்திரகனி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    ×