search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ’ஜிகர்தண்டா 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் படக்குழுவிற்கு நேரிலும் சமூக வலைதளத்திலும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.


    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படத்தை தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "கலை மூலம் துப்பாக்கிகளை எதிர்கொள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.


    ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி வருவதாக கூறியிருந்தார்.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காந்தாரா 2' படத்தின் திரைக்கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி முடித்துள்ளதாகவும் இப்படத்தின் பூஜை நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கதைக்காக ரிஷப் ஷெட்டி பல ஆராய்சிகளை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    • எந்திரன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
    • இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.


    இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார். இதில் 'சிட்டி தி ரோபோ' போன்ற வசனங்கள் இன்றளவும் பேசும் வசனங்களாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது.

    அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் 'கிளிமாஞ்சாரோ' பாடல் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் ஷூட் செய்யப்பட்டதாக அப்போதே தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த பாடலை பாடிய சின்மயியையும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். எல்லா இடங்களிலும் இந்தப் பாடல் ஒலித்தது.


    இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக கென்யா சென்றுள்ள பாடகி சின்மயி, அங்குள்ள மாசாய் பழங்குடி மக்களுடன் இணைந்து 'கிளிமாஞ்சாரோ' பாடலை பாடி ஆடியுள்ளார். அது தொடர்பான வீடியோவை சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    • விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தின் புரொமோ வீடியோவில், "மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜாவிடம் காதல் தோல்வி அடைந்த ஒருவர் பாட்டு கேட்க வருகிறார். தொடர்ந்து அம்மா மீது பாசம் இல்லை என ஒருவர் வைத்தியம் பார்க்க வருகிறார். அவர்களுக்கு சில பாடல்களை பரிந்துரை செய்த மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக சதீஷ் வரும் போது அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.


    தனக்கு தூக்கம் வராமல் இருக்க ஒரு பாடல் வேண்டும் என்றும் தூக்கம் வந்தால் கனவில் நடப்பதெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது என்று கூறுகிறார். இதனை அடுத்து அவருக்கும் ஒரு பாட்டு கொடுக்கிறார். இதனை அடுத்து அவர் எழுந்து செல்லும் போது அனிருத் பாடல் ஒலிக்கிறது. அர்ச்சனா கல்பாத்தி மேடம் தான் கால் செய்தார்கள், 'தளபதி 68' படத்தின் பாடலையும் கேட்டு வரச் சொன்னார்கள் என்று கேட்க, அதற்கு யுவன் சங்கர் ராஜா வெளியில வெங்கட் பிரபு வெயிட் பண்ணுகிறார், அவரிடம் நான் சொல்லி கொள்கிறேன்" என்று கூறுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இதன் மூலம் 'தளபதி 68' முதல் பாடல் ரெடியாகிவிட்டதாகவும் இந்த பாடலை அனிருத் பாடவுள்ளதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் இன்று வெளியாகவுள்ளது.


    • தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
    • சென்னை பெருநகர காவல் போக்குவரத்து காவல்துறை அதிரடி.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

    நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ததை அடுத்து, தனுஷ் தனித்து வசித்து வருகிறார்.

    இந்நிலையில், இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் தனுஷின் 17 வயது மகனுக்கு அபராதம் விதித்து சென்னை பெருநகர காவல் போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், தலைகவசம் அணியாமலும் ஆர் 15 ரக பைக்கை ஓட்டியதாக போலீசார் அபராதம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • ரீ-ரிலீஸ் செய்வது பற்றி சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார்.
    • உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியீடு.

    கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.

    ஆளவந்தான் படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் எஸ். தானு பதில் அளித்திருந்தார். அப்போது, படத்தை ரீ-ரிலீஸ் செய்வது பற்றி சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    அந்த வரிசையில், ஆளவந்தான் திரைப்படம் அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் தானு தெரிவித்து இருக்கிறார். ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கடவுள் பாதி மிருகம் பாதி கவிதை பாடல் நாளை (நவம்ர் 17) மாலை 5.03 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கமல்ஹாசனுடன் ரவீனா டாண்டன், அனுஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும் ஆளவந்தான் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார்.

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


    • நடிகை ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
    • அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. சமீபத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.


    இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து deep fake மூலம் 'டைகர் 3' திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப்யின் சண்டை காட்சி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ deep fake மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    டேனியல் கால்டாகிரோன்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், "தங்கலான் அற்புதமாக வந்துள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.


    • ராம்குமார் பாலகிருஷ்ணன் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பார்க்கிங்' . திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'பார்க்கிங்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சினையை விவரிக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த டிரைலரில் 'என்ன செஞ்சவங்கள திருப்பி எதாவது செய்யனும்ல' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    • இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி’.
    • இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.


    19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் இயக்கவுள்ளதாகவும் இதில், ஹீரோவாக ரவி கிருஷ்ணாவும் ஹீரோயினாக அனஸ்வர ராஜனும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக செய்தி பரவி வந்தது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '7ஜி ரெயின்போ காலனி 2' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் செய்தி வலம் வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
    • இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.


    இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தினை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதில், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவிவந்தது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.


    இந்நிலையில், விக்னேஷ் சிவன் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இப்படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×