search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்
    • இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமானார்

    நடிகர் ஜூனியர் பாலையா வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில்,  காலமானார். அவருக்கு வயது 70.

    கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடத்துள்ளார். அவரது உடல் வளசாரவாக்கத்தில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், நண்பர்கள், திரையுலகத்தினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். நாளை அவரது உடல் தகனம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • லியோ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு லியோ வெற்றி விழாவாக கொண்டாடியது.

    வெற்றி விழாவில் அனைவரும் எதிர்பார்த்த நடிகர் விஜயின் பேச்சு அனைவரையும் கவரும் வகையில் இருந்ததோடு, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தனது திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது பாட்டு பாடி, நடனம் ஆடுவது உள்ளிட்டவைகளை செய்யும் விஜய் இன்றும் அதை குறையில்லாமல் செய்தார்.

    பிறகு குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், விழாவில் தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தனக்கே உரித்தான பானியில் பதில் அளித்தார். அதன்படி தொகுப்பாளர்கள் 2026 பற்றிய கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த விஜய், "அந்த ஆண்டில் கால்பந்து போட்டி நடைபெற இருக்கிறது. கப்பு முக்கியம் பிகிலு," என்று தெரிவித்தார்.

    இவரது இந்த கருத்தின் மூலம் 2026-ம் ஆண்டு நடிகர் விஜய் தமிழ்நாடு அரசியலில் களமிறங்குவார் என்று அவர்களது ரசிகர்கள் விழா நடைபெற்ற அரங்கில் உற்சாகமாக கரகோஷம் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை ஆரவாரமாக வெளிப்படுத்தினர். இதன் காரணமாக விழா அரங்கமே அதிர்ந்தது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், படக்குழு சார்பில் லியோ வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

    லியோ படத்தில் நடிகர் அர்ஜூன் உள்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ரத்ன குமார், "எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசித்தால் உணவுக்காக கீழே வந்து தான் ஆக வேண்டும்," என்று தெரிவித்தார். இவரது பேச்சுக்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
    • லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு லியோ வெற்றி விழாவாக கொண்டாடியது. 

    லியோ வெற்றி விழாவில் மேடை ஏறிய நடிகர் விஜய் பாட்டு பாடி, நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பிறகு பேசத் தொடங்கிய அவர் வழக்கம் போல குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் விளக்கம் அளித்தார். இத்துடன் தனது அரசியல் வருகை குறித்தும் சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார்.

    அப்படியாக, " புரட்சி தலைவர்-னா ஒருத்தர் தான், நடிகர் திலகம்-னா ஒருத்தர் தான், புரட்சி கலைஞர்-னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலகநாயகன்-னா ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார்-னா ஒருத்தர் தான். தல-னா ஒருத்தர் தான்," என்று தெரிவித்தார்.

    மேலும் தளபதி குறித்து பேசிய விஜய், "என்னை பொருத்தவரை தளபதி என்பவர், மன்னர்கள் சொல்வதை செய்து முடிப்பவர். எனக்கு மன்னர்கள் மக்களாகிய நீங்கள் தான். நீங்கள் சொல்லுங்கள், நான் செய்து முடிக்கிறேன்," என்று கூறினார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. இதையொட்டி படக்குழு சார்பில் லியோ வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

    லியோ வெற்றி விழாவில் மேடை ஏறிய நடிகர் விஜய் பாட்டு பாடி, நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பிறகு பேசத் தொடங்கிய அவர் வழக்கம் போல குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார்.

    அதன்படி, "ஒரு காட்டில் யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு, இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வச்சு ஒன்னும் கிடைக்காம திரும்பி வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க. நம்மளால எதை ஜெயிக்க முடியுமோ அதை செய்வோம். ஜெயிக்க முயற்சி செய்யும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு இடம் இருக்கும். பெருசா கனவு கானணும் நண்பா," என்று குட்டி ஸ்டோரியை முடித்துக் கொண்டார். 

    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
    • லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. இதையொட்டி படக்குழு சார்பில் லியோ வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

    இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் லியோ படத்தின் அனுபவம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பேசினர். அதன்பிறகு வெற்றி விழா நிறைவில் மேடை ஏறிய நடிகர் விஜய், லியோ படத்தில் இடம்பெற்று இருக்கும் 'நா ரெடி' பாடலை பாடி, நடனமும் ஆடி மகிழ்ந்தார். 

    இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், "உங்களுக்காக என் தோலை செருப்பா தச்சா கூட உங்க அன்புக்கு ஈடு ஆகாது, என்னைக்குமே உங்களுக்கு உண்மையா இருப்பேன். எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும், அதுக்கு நம்ம பசங்க தான் காரணமா இருக்கனும்." என்று தெரிவித்தார். 

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், படக்குழு சார்பில் லியோ வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "பல இயக்குனர்கள் என் படத்தில் நடிக்கிறார்கள். அவர்கள் என்னை அணுகும் முறை மற்றும் வேலை செய்ய சுதந்திரம் கொடுக்கிறார்கள். என் படத்தில் வெற்றிமாறனை நடிக்க ஆசை பட்டேன். இதுவரை நடக்க வில்லை. மூன்று படத்தில் நடிக்க கேட்டுவிட்டேன். அவர் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. கண்டிப்பாக நடிக்க வைத்து விடுவேன்," என்றார்.

    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • லியோ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. இதையொட்டி படக்குழு சார்பில் லியோ வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதில் கலந்து கொண்டு பேசிய திரிஷா, "லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோயின்கள் இறந்துடுவாங்க. ஆனா இந்த படத்தில் என்னை கொலை செய்யல. அதற்கு லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி. லியோ படத்தில் அப்படி போடு பாட்டு மாதிரி ஒரு பாட்டு கேட்டேன். ஆனா அவர் வைக்கல. 20 வருசமா விஜயை எனக்கு தெரியும். எப்படி பார்த்தேநோ அப்படியே இருக்கிறார். அதுதான் அவர் ஸ்பெஷல்," என்று தெரிவித்தார்.

    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
    • லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு லியோ வெற்றி விழாவாக கொண்டாடியது.

    லியோ படத்தில் நடிகர் அர்ஜூன் உள்பட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அர்ஜூன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் முதல்வன். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் ரகுவரனிடம் கேள்வி கேட்கும் காட்சிகள் அடங்கிய காட்சி மிகவும் பிரபலம்.

    அதுபோல் லியோ வெற்றி விழாவில் அர்ஜுன் விஜய்யிடம் கேள்வி கேட்டார். விஜய்யாக இருப்பது கஷ்டமா? ஈசியா? என்று அர்ஜுன் கேள்வி கேட்டார். அதற்கு விஜய், வெளியே இருந்து பார்ப்பதற்கு கஷ்டமா தெரியும், ஆனா எனக்கு ரொம்ப ஈசி. ஏனா ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள், என்றார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் லியோ படக்குழு, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    அந்த வகையில் லியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கவுதம் மேனன், "நானும் விஜயும் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தில் இணைய வேண்டியது... முடியாமல் போனது. தற்போது லியோவில் இணைந்து இருக்கிறோம். யோகன் அத்தியாயம் ஒன்று உருவாகும் என்று நினைக்கிறேன். தளபதி am Waiting," என்று தெரிவித்தார்.

    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • லியோ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் லியோ. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருக்கும் லியோ படம் 12 நாளில் 540 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இதனை கொண்டாடும் வகையில், படக்குழு லியோ வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த வெற்றி விழா சென்னை நேரு உள்-விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் மன்சூர் அலிகான் மற்றும் படக்குழுவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய மன்சூர் அலிகான், "சிவாஜி பேசிய சக்சஸ் வசனம் பேசிய இடத்தில் இருந்து விஜய்யின் நாளைய தீர்ப்பு திரைப்படம் ஆரம்பம் ஆனது. இன்று தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய். நடு ராத்தரியில் போன் செய்து லியோ படத்தில் ஏன் பிளாஷ்பேக் பொய் சொன்ன என்று கலாய்க்கிறார்கள். யாரும் படத்தை பார்த்து தம், சரக்கு அடிக்காதீர்கள். அது எல்லாம் சும்மா, பொய். விஜய் ரசிகர்கள் நாளைய தீர்ப்பை எழுத தயாராக இருங்கள்," என்றார்.

    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
    • லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. படம் வெளியாகி 12 நாட்களில் ரூ. 540 கோடி வசூலித்து இருப்பதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்-விளையாடு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின், "எனக்கு இரண்டு லெஜன்ட் தெரியும். ஒன்று மைக்கேல் ஜாக்சன், மற்றொன்று புருஸ்லீ. நான் கண்ணில் கண்ட முதல் லெஜன்ட் விஜய். அவர் சினிமாவிலும் ஹீரோ, நிஜத்திலும் ஹீரோ. ஒவ்வோரு துளியிலும் அவரது உழைப்பு இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்," என்று தெரிவித்தார்.

    ×