என் மலர்
சினிமா செய்திகள்
லியோ வெற்றி விழா: 2026-ல் அரசியல் - கப்பு முக்கியம் பிகிலு.. விஜய் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்
- விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- லியோ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு லியோ வெற்றி விழாவாக கொண்டாடியது.
வெற்றி விழாவில் அனைவரும் எதிர்பார்த்த நடிகர் விஜயின் பேச்சு அனைவரையும் கவரும் வகையில் இருந்ததோடு, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தனது திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது பாட்டு பாடி, நடனம் ஆடுவது உள்ளிட்டவைகளை செய்யும் விஜய் இன்றும் அதை குறையில்லாமல் செய்தார்.
பிறகு குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், விழாவில் தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தனக்கே உரித்தான பானியில் பதில் அளித்தார். அதன்படி தொகுப்பாளர்கள் 2026 பற்றிய கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த விஜய், "அந்த ஆண்டில் கால்பந்து போட்டி நடைபெற இருக்கிறது. கப்பு முக்கியம் பிகிலு," என்று தெரிவித்தார்.
இவரது இந்த கருத்தின் மூலம் 2026-ம் ஆண்டு நடிகர் விஜய் தமிழ்நாடு அரசியலில் களமிறங்குவார் என்று அவர்களது ரசிகர்கள் விழா நடைபெற்ற அரங்கில் உற்சாகமாக கரகோஷம் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை ஆரவாரமாக வெளிப்படுத்தினர். இதன் காரணமாக விழா அரங்கமே அதிர்ந்தது.