search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'லியோ'.
    • இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.


    லியோ போஸ்டர்

    இந்நிலையில், 'லியோ' படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஏழு நாட்களில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், 'லியோ' திரைப்படம் இதுவரை ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


    விஜய்- பார்த்திபன்

    இந்நிலையில், 'லியோ' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பார்த்திபன் (விஜய்) கதாபாத்திரத்தின் புகைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனின் புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் எடிட் செய்து எக்ஸ் தளத்தில் அவரை tag செய்து பதிவிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், 'Mr Vijay fans மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு!" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் ஆர். பிரேம்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காதலே காதலே'.
    • 'சீதா ராமம்' பட இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

    ஆர். பிரேம்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காதலே காதலே'. மஹத் ராகவேந்திரா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், வி.டி.வி கணேஷ், ரவீனா ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்திற்கு 'சீதா ராமம்' பட இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர்கள், படக்குழுவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


    படத்தைப் பற்றி இயக்குனர் ஆர். பிரேம்நாத் கூறியதாவது, அனைவரின் வாழ்க்கையிலும் இளமை பருவத்தில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக காதல் இருந்து வருகிறது. இருப்பினும், காதலில் விழுவதும் அந்தத் துணையுடன் வலுவான உறவில் இருப்பதும் காலப்போக்கில் மாறிவிட்டது.


    'காதலே காதலே' தற்போதைய தலைமுறையின் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை திரையில் காண்பிக்க இருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதல் கொண்டாட்டமாக இந்த படம் இருக்கும். மஹத் ராகவேந்திராவுக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையை டெவலப் செய்த பிறகு, இந்த கதாபாத்திரங்களுக்கு மஹத்தும், மீனாட்சியும் சரியான தேர்வாக இருப்பார்கள் என்று நான் உணர்ந்தேன் என்று கூறினார்.

    • ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
    • 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.

    முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, நவராத்திரி விழாவைப் புதுமையான முறையில் தமிழக மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. தமிழ்நாடு எங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர். 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.



    பொதுமக்கள் கலந்துகொள்ள திருவிளக்கு பூஜை, சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் என பல்வேறு நிகழ்வுகள் மூலம் அசத்தியுள்ளது விஜய் டிவி.


    தமிழ் நாட்டில், காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர். இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர்.

    • சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார்.
    • சுதா கொங்கராவின் புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும்.


    இந்நிலையில், இப்படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.  அதில், படத்தின் தலைப்பில் பாதியை மறைந்து  'புறநானூறு' என தெரியும்படி வீடியோ வெளியாகியுள்ளது.மேலும்,  ரத்தம் தெறிக்க.. தீப்பொறி பறக்க.. சூர்யா தோன்றும் இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
    • இவரது இசை நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை காவல் துறையினர் பல்வேறு நிபந்தனைகள் விதித்து நிகழ்ச்சி நடந்த அனுமதி வழங்கியுள்ளனர். அதாவது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட டிக்கெட்டுகள் விற்கக்கூடாது எனவும் டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.


    20 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த மைதானத்தில் இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 5 ஆயிரம் எண்ணிக்கையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை முறையாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

    இதற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு சர்ச்சையான நிலையில் அதுபோன்று எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
    • சமீபத்தில் அனிருத் இசையில் ரஜினியின் 'ஜெயிலர்’, விஜய்யின் ’லியோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

    2012-ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலை இல்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


    சமீபத்தில் அனிருத் இசையில் ரஜினியின் 'ஜெயிலர்', விஜய்யின் 'லியோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில், 'லியோ' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆர்டினரி பர்சன்' என்ற பாடலை ஐரோப்பாவின் பெலரஸ் நாட்டை சேர்ந்த இசைக்கலைஞர் ஒட்னிகாவின் "வேர் ஆர் யூ'' பாடல் ஆல்பத்தில் இருந்து அனிருத் காப்பி அடித்து இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.



    ஒட்னிகா-அனிருத்

    இது குறித்து ஒட்னிகாவுக்கும் தகவல்கள் அனுப்பினர். இதை பார்த்த அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "லியோ படத்தின் பாடல் குறித்து எனது மெயில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் கமெண்ட் செய்துவருவதை பார்த்தேன். அதற்கு நன்றி. இந்த சர்ச்சை குறித்து எனக்கு தெளிவாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிப்பதற்கு நேரம் கொடுங்கள்'' என்று கூறியுள்ளார். இது தற்போது பரபரப்பாகியுள்ளது. 


    • நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

    நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தாய்லாந்தில் நடைபெறும் இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடிகர் சூர்யாவின் காட்சிகள் நவம்பர் மாதத்தில் முடிவடையும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

    • நடிகை அமலா பால் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
    • இவர் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

    சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.


    இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நண்பர்கள் உடன் ஜாலியாக சுற்றுலா செல்வதும் பாருக்கு செல்வதும் என கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.


    அமலா பால் இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலா பாலின் நெருங்கிய நண்பரான ஜனா தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • டி.ஆர். விஜயன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரம்ம முகூர்த்தம்'.
    • இந்த படத்திற்கு ஶ்ரீ சாஸ்தா இசையமைக்கிறார்.

    இயக்குனர் டி.ஆர். விஜயன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரம்ம முகூர்த்தம்'. விஜய் விஷ்வா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா நடித்துள்ளார். மேலும், மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், சி.ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், கோதண்டம், அறந்தாங்கி சங்கர், சின்னத்திரை தளபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


    கே.வி. மீடியா (KV Media) தயாரிப்பாளர் பி. செந்தில்நாதன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஶ்ரீ சாஸ்தா இசையமைக்கிறார். ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் கலவரங்களும் அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த, நாயகன் நடத்தும் போராட்டங்கள் என காமெடியுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு ,சென்னை, திருவள்ளூர், ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதாக முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    பிரம்ம முகூர்த்தம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த போஸ்டர் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருண்ராஜா காமராஜ் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இந்த வெப் தொடரில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், லேபில் என்றால் என்ன என்பது குறித்து பொது மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஒரு சிலர், லேபில் என்பது புத்தகத்தில் ஒட்டுவது என்றும் துணியுடன் வருவது என்றும் கூறினர். இதே கேள்வியை வட சென்னை மக்களிடம் கேட்டபோது அவர்கள், "லேபில் என்பது ஒரு கெத்து. இந்த இடத்தில் யார் பெரிய ஆளோ அவரே லேபில். வட சென்னையை பொறுத்தவரை யார் லேபில் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொருவர் இருப்பார்கள். நாம் யாரை பார்த்து பயப்படுகிறோமோ அவர்தான் லேபில்" என்று கூறினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் நலன் குமாரசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்தியா திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து, கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். 'கார்த்தி 26' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் நலன் குமாரசாமி தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.


    ×