search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் விநாயக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இவர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24-ஆம் ரிலீஸாக உள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'துருவநட்சத்திரம்' திரைப்படத்தில் நடிகர் விநாயக் ஸ்டைலிஸ் வில்லனாக நடித்துள்ளார். அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் கவுதம் மேனன், "ஜெயிலர்' படத்தில் நடித்த மலையாள நடிகர் விநாயகத்தை இந்த படத்தில் ஸ்டைலான வில்லனாக பார்க்கலாம். 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது" என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் விநாயக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

    • வேலாயுதம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் மிலன்.
    • இவர் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றினார்.

    2006-ஆம் ஆண்டு வெளியான கலாபக் காதலன் திரைப்படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் மிலன். இவர் வேலாயுதம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.


    அஜித்- மிலன்

    இந்நிலையில், இன்று கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜான் நாட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதாவது, இன்று அதிகாலை மிலன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பாதிவழியிலேயே மிலன் உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
    • இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24-ஆம் ரிலீஸாக உள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'துருவநட்சத்திரம்' திரைப்படத்தை யூனிவர்ஸ் போன்று உருவாக்க விருப்பம் உள்ளதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். அதாவது 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தால் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' போல 'துருவ நட்சத்திரம்' படத்தை வைத்து ஒரு யூனிவர்ஸை உருவாக்கும் ஐடியா இருப்பதாகவும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில் அதன் இரண்டாம் பாகத்திற்கான லீட் உள்ளதாகவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நானி நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய் நான்னா’.
    • இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஹாய் நான்னா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் தற்போது இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தில் சுஷ்மிதா அன்புசெழியன், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், மனோபாலா, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் சந்தானம் தொடங்கியுள்ளார். இதனை சந்தானம் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா -2’.
    • இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியானது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 'ஜிகர்தண்டா- 2' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு வீடியோவை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்றன.
    • ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது.

    'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் ரெய்டு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. சமீப காலமாக வெளியாகியுள்ள விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.

    ஆக்ஷன் த்ரில்லர் படமாக 'ரெய்டு' உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி இயக்கி இருக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.

    இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

    • லியோ திரைப்படம் வருகிற 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடித்துக் கொள்ள அரசு உத்தரவு.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    லியோ திரைப்படம் வருகிற 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வருகிற 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு அரசு உத்தரவிட்ட நிலையில் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், லியோ திரைப்படம் வெளியாக சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

    LEO படத்தின் முதல் 10 நிமிடங்களை தவற விட்டுவிடாதீர்கள்... எப்படியாவது படம் போடுவதற்கு முன்பு தியேட்டர் சென்றுவிடுங்கள். பார்வையாளர்களுக்கு ட்ரீட்டாக அமையும். அந்த 10 நிமிடத்திற்காக ஓராண்டாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உழைத்துள்ளோம் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

    • நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு அஜர்பைஜான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் மற்றும் படக்குழு அஜர்பைஜான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


    அஜித்- ஆதிக் ரவிச்சந்திரன்

    இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அரசு உத்தரவு

    இதையடுத்து 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என திரையரங்குகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் , சிறப்பு காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'லியோ'.
    • இப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 'லியோ' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சென்னை, கோயம்பத்தூர், மதுரை போன்ற மாவட்டங்களில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

    • இயக்குனர் ஹரி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.

    சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். விஷால் 34 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசி யாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது.


    இந்நிலையில், நடிகர் விஷாலுக்கு யோகிபாபு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது, காரைக்குடி படப்பிடிப்பின் போது நடிகர் யோகிபாபு, முருகர் சிலை ஒன்றை வாங்கி விஷாலுக்கு பரிசளித்துள்ளார். இதனை விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    ×