என் மலர்
சினிமா செய்திகள்
- 'லியோ' திரைப்படம் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைபை கிளப்பியது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "ரஜினியின் 171-வது படத்தின் கதையை விஜய்யிடம் கூறினேன். கதையை கேட்ட விஜய் வெறும் 10 நிமிடம் சொல்லும் எந்த கதையும் எனக்கு இதுவரை பிடித்ததில்லை. இது பயங்கரமா இருக்கு டா" என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
- இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கிறார்.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசி யாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குமாரசக்கணபுரம் கிராமத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் விஷாலிடம் அக்கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக கிராம மக்கள் கூறினர். இதையடுத்து, விஷால் லட்சக்கணக்கில் செலவு செய்து போர்வெல் எந்திரங்கள் மூலம் அங்குள்ள கண்மாயின் கரையில் சுமார் 60 அடி ஆழம் போர் அமைத்து, 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக 6 குழாய்களையும் பொருத்தி கொடுத்துள்ளார்.
இப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில் கிராம மக்களிடம் பணிகள் நிறைவடைந்த பின் அதன் திறப்பு விழாவிற்கு தான் கட்டாயம் வருவதாக கூறி சென்றுள்ளார். நடிகர் விஷால் படப்பிடிப்பிற்கு வந்த இடத்தில் கிராம மக்களின் தண்ணீர் தேவையை அறிந்து சொந்த செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து குமாரசக்கணபுரம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சென்னம்மாள் கூறியதாவது, நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக வந்த போது என்னிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று விஷால் கேட்டார்.
நான் எனக்கு ஒன்றும் வேண்டாம், கிராமத்தில் தான் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அதற்கு ஏதாவது உதவ வேண்டும் என்று கூறினேன். அதுமட்டுமன்றி, நடிகர் விஷாலை பார்த்து 'நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க.. கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று கேட்டேன்.'கல்யாணம் பண்ணிக் கிட்டா நான் படப்பிடிப்புக்கு வந்துருவேன்.. மனைவி வீட்ல தனியா இருக்கணுமே' என்றார். மேலும், என்னை சென்னைக்கு வந்து விடுமாறும் கூறினார் என சென்னம்மாள் தெரிவித்துள்ளார்.
- லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- லியோ படத்தின் டிரைலர் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
#Anbenum - #LeoThirdSingle is releasing tomorrow #Thalapathy @actorvijay na @trishtrashers @Dir_Lokesh @anirudhofficial @SonyMusicSouth #Leo pic.twitter.com/qpA7JX6cuQ
— Jagadish (@Jagadishbliss) October 10, 2023
இந்த நிலையில், லியோ படத்தின் மூன்றாவது பாடல் "அன்பெனும்" நாளை (அக்டோபர் 11) வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
- ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார்.
- இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி இந்த படத்திற்கு கிங்ஸ்டன் என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.
A dream voice from tamil cinema … it's a team full of youngsters with only passion and love for cinema … here is my production's first film #Kingston #GV25 Thanks a lot @ikamalhaasan sir …#kingston @storyteller_kp @divyabarti2801 @gokulbenoy @dhilipaction @Sanlokesh… pic.twitter.com/XEha8DRzEa
— G.V.Prakash Kumar (@gvprakash) October 10, 2023
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்ய பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
- விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மார்க் ஆண்டனி போஸ்டர்
இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 13-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
a laughter fest taking you beyond the dimensions of time! ?️#MarkAntonyOnPrime, Oct 13 pic.twitter.com/GmGjSfoku9
— prime video IN (@PrimeVideoIN) October 10, 2023
- மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி.
- இவர் தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க. கட்சியை சேர்ந்த சுரேஷ்கோபி, கொச்சியில் ஒரு விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவர், மறு பிறவியில் நம்பிக்கை கொண்டவன் நான். எனது மறு பிறவியில் தந்திரி குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன். பூணூல் அணியும் சமூகத்தில் பிறந்து சபரிமலை தந்திரியாக வேண்டும். சபரிமலையில் வெளியில் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்தால் மட்டும் போதாது. கோவிலுக்குள் சென்று அமர்ந்து பூஜை செய்து தரிசிக்க வேண்டும். அய்யப்பனை கட்டிப்பிடித்து முத்தமிட விரும்புகிறேன் என்றார்.
சுரேஷ் கோபி இதற்கு முன்பு ஒரு முறை இதுபோல பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விகாஸ் பாஹி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்பத்’.
- இப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விகாஸ் பாஹி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்பத்'. டைகர் ஷெராப், கீர்த்தி சனோன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பூஜா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குட் கோ நிறுவனம் சார்பில் வாசு பாக்னானி, ஜாக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் மற்றும் விகாஸ் பால் ஆகியோர் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.
இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'கண்பத்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களையும் பார்வையாளர்களையும் முழுமையாக பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் உள்ள VFX அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.
- மணீஷ் சர்மா இயக்கியுள்ள திரைப்படம் ‘டைகர் 3’.
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'டைகர் 3' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கத்ரீனாவின் சோலோ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டைகர் 3 போஸ்டர்
இது குறித்து கத்ரீனா கூறியதாவது, ஜோயா, ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி, அதுபோன்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவள் கொடூரமானவள், அவள் தைரியமானவள், அவள் நல் இதயம் கொண்டவள் , அவள் விசுவாசமானவள், அவள் பாதுகாவலர், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் மனிதகுலத்திற்காக ஒவ்வொரு முறையும் முன் வருகிறார் .
ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸில் ஜோயாவாக நடித்தது ஒரு நம்பமுடியாத பயணம் மற்றும் ஒவ்வொரு படத்திலும் நான் என்னை சோதனைக்கு உட்படுத்தினேன், இதற்கு டைகர் 3 விதிவிலக்கல்ல. இந்த முறை ஆக்ஷன் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினோம், படத்திற்காக எனது உடலை பிரேக்கிங் பாயிண்டிற்கு தள்ளியுள்ளேன், மக்கள் அதை பார்ப்பார்கள். உடல் ரீதியாக இது எனக்கு மிகவும் சவாலான படம்.
எப்போதும் ஆக்ஷன் செய்வது உற்சாகமாக இருக்கும், நான் எப்போதும் போல் ஆக்ஷன் வகையின் ரசிகை . அதனால், ஜோயாவாக நடிப்பது எனக்கு ஒரு கனவு. வலிமையான, தைரியமான வேடம் ஏற்றேன் சோயாவை திரையில் பார்க்கும்போது மக்கள் என்ன எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
- திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நாசர்.
- இவர் நடிகர் சங்க தலைவருமாக உள்ளார்.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நாசர். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் நாசரின் தந்தை காலமானார். செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாசர் திரையுலகில் ஜொலிப்பதற்கு அவரது தந்தையும் ஒரு காரணமாவார். தன் தந்தையின் ஆசைக்காக நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த நாசர் அதன்பின், நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு, பெரியளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தாஜ் ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலைக்குச் சென்றார். பின்னர் மீண்டும் அவரின் தந்தை கட்டாயத்தின் பேரில் வாய்ப்புகளை தேடி அலைந்து மிகப்பெரும் நடிகராக உள்ளார்.
- 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, 'ஜிகர்தண்டா -1' நான் பண்ணவேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள். தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியவில்லை. நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன். அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு தான் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
எனக்கு வாழ்க்கையில யாரெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களை நான் குரு என்று தான் சொல்லுவேன். பாலசந்தர் சார் கூட ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரை நான் குரு என்று தான் சொல்லுவேன். கார்த்திக் சுப்பராஜும் இப்போது குரு தான். அவர் என்ன சொன்னாரோ அது தான் இந்தப்படம்.
கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து தந்துள்ளார்கள். அடுத்தவர்களுக்கு உதவிய காரணத்திற்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். சந்தோஷ் நாராயணன் சாரோட பெரிய ரசிகன் நான். நிறைய மேடைகள் இருக்கிறது. இந்தப்படத்தை பற்றி நிறைய பேச வேண்டும். எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது மகிழ்ச்சி.
- ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
- சென்னையில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் சென்னையில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து பல ரசிகர்கள் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்த நிலையில் திரைப்பிரபலங்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகளை பகிர்ந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ரசிகர்களுகு கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த கட்டணங்களும் திருப்பி கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், ஸ்விட்சர்லாந், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் எதற்காக ஐ.நா. சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐ.நா.வில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
- இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அனிமல் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'நீ வாடி' பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Hua main ❤️
— Rashmika Mandanna (@iamRashmika) October 10, 2023
Out tomorrow..
this song is ????
And I personally love it in all the versions.. Hindi Kannada telugu tamil and Malayalam .. ???#HuaMain #Ammayi #Neevaadi #OhBhaale #Pennaale#AnimalTheFilm@AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor @thedeol @tripti_dimri23… pic.twitter.com/JH7eADNoDs