என் மலர்
சினிமா செய்திகள்
- சியோன் ராஜா எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சமூக விரோதி’.
- இப்படத்தின் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னையில் வெளியிடப்பட்டன.
'பொதுநலன் கருதி' திரைப்படத்தை இயக்கிய சியோன் ராஜா எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'சமூகவிரோதி'. ஜியோனா பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்திற்கு மாலக்கி இசையமைத்துள்ளார், ஜிஜு மோன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரஜின், நாஞ்சில் சம்பத், வனிதா விஜயகுமார், கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னையில் வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், நடிகர்கள் லொள்ளு சபா ஜீவா, இமான் அண்ணாச்சி, விஜய் விஷ்வா, சவுந்தரராஜா, சந்திரசேகரா, சிங்கப்பூர் தொழில் ஆலோசகர் ஜவஹர் அலி, படத்தின் இயக்குனர் சியோன் ராஜா, கதாநாயகன் பிரஜின், டிஃபெண்டர் வழக்கறிஞர்கள் எம்.தாமோதரகிருஷ்ணன், எம். கோகுல கிருஷ்ணன், நடிப்புப் பயிற்சியாளர் ஜெயராவ், முதலீட்டாளர்கள் விஜயராகவன், சாய் சரவணன், விவேக்,சதீஷ், தொழிலதிபர் நாமக்கல் சின்ன மருது, தமிழ்நாடு மாணவர் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சித்ரா முரளிதரன், படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி, இசையமைப்பாளர் மாலக்கி, கலை இயக்குனர் முஜிபுர் ரகுமான் , நிர்வாகத் தயாரிப்பாளர் வினோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி பேசியதாவது, திரைப்படத் துறையும் அரசியலும் சம்பந்தமில்லாதது போலும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்த வேண்டாம் என்றும் இங்கே சர்ச்சை முன்வைக்கப்பட்டது. திரைத்துறைக்கும் அரசியல் துறைக்கும் சம்பந்தம் உள்ளது. சினிமா ஒரு புகழ்பெற்ற ஊடகமாக வளர்ந்துள்ளது . 1973 -ல் காட் பாதர் படத்தில் நடித்ததற்கு நடிகர் மார்லன் பிராண்டோ ஆஸ்கர் விருதுக்கு தேர்வானார். அந்த விருது விழாவில் அவர் அந்த விருதை ஏற்காமல் ஒரு செவ்விந்திய பெண்ணை வைத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பேச வைத்தார். அந்தப் பூர்வீக குடிகளின் ஒடுக்குமுறை பற்றிக் கவலைப்பட்டு அந்த விருதை மறுப்பதாகத் தெரிவித்தார்.
கலைஞர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும். சர்வாதிகாரி ஹிட்லரை பார்த்து உலகமே பயந்து கொண்டிருந்தபோது டிக்டேட்டர் படத்தில் அவரை நகைச்சுவைக்குரிய கேலிக்குரியவராகக் காட்டி அவர் பிம்பத்தை உடைத்தார் சார்லி சாப்ளின். இப்படிக் கலைஞர்கள் சமூக மனசாட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே ரஜினி மக்கள் பிரச்சினைக்குக் குரல் கொடுக்கவில்லை என்று கேட்கும் போது அவர் பதில் தரலாம், மறுக்கலாம். அது அவர் மனசாட்சிக்கு உட்பட்டது. ஆனால் சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் அவர் குரல் கொடுத்து அதைத் திசை திருப்பி தன்னுடைய ரசிகர்களைத் தவறான பாதையில் செல்ல வழி வகுக்கக் கூடாது.
அவர் ஒரு பெரிய கதாநாயகனாக இருக்கிறார். படங்களில் அவர் உடுத்துகிற உடைகளை ரசிகர்கள் உடுத்துகிறார்கள். அவர் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்துகிறார்கள் .அப்படிப் பின்பற்றுபவர்கள் இருக்கும்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று கூறியது எவ்வளவு தவறானது. எதற்கும் குரல் கொடுக்காதவர் அப்படிப் பேசும்போது கோபம் வரத்தான் செய்யும். அரசியலற்று இருங்கள் அமைதியாக இருங்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 15 ஆயிரம் பேரை என்கவுண்டர் மூலம் கொலை செய்த யோகி ஆதித்யநாத் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் காலில் விழும்போது, நாங்கள் கேள்வி கேட்கத்தான் செய்வோம்.
சமூக விரோதி காலில் ரஜினிகாந்த் விழும்போது அதை நாங்கள் கேள்வி கேட்போம். சமூக விரோதியை அவர் ஆதரிப்பதாகவே எடுத்துக் கொள்வோம். நான் மூன்று ஆண்டுகள் ஐநா சபையில் உரையாற்றினேன். மீண்டும் செல்வதற்கு அங்கே அனுமதி உண்டு. ஆனால் 5 ஆண்டுகளுக்கு எனது பாஸ்போர்ட்டை முடக்கி விட்டார்கள். சமூகப் பிரச்சினைகளை பேசினாலே சமூக விரோதிகள் என்கிறார்கள். தேசத்தின் பிரச்சினை பேசினால் தேச விரோதி என்கிறார்கள். இங்கே எதிர் முகாம் பிரம்மாண்டமாகப் பெரும் பலத்தோடு நிற்கிறது. அப்படிப்பட்டவர்களை இது மாதிரி படங்கள் மூலம் தான் எதிர்க்க வேண்டும். அவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அப்போது டேவிட் கோலியாத் சண்டை போல் நாம் போட வேண்டும். அதனால் தான் இந்த பட முயற்சியை ஆதரிக்கிறோம்" என்று வாழ்த்தினார்.
- நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினார்.
- இந்த பிறந்தநாளை கொண்டாடிய கையுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மலேசியாவுக்கு சென்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா, தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக வலம் வருகிறார். கதை, கதாபாத்திரங்களை பொறுத்து ஒவ்வொரு படத்திற்கும் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். நயன்தாரா நடிப்பு மட்டுமல்லாமல் வேறு சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார்.
சமீபத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்களது முகங்களையும் வெளியுலகுக்கு காண்பித்தனர். இந்த பிறந்தநாளை கொண்டாடிய கையுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மலேசியாவுக்கு சென்றனர்.
இந்த நிலையில் நயன்தாராவுடன் விக்னேஷ்சிவன் மலேசியாவில் இரவு நேரத்தில் உலா வரும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து 'அவளோடு இருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
- ரஜினியின் 170-வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினி
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பணக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த், கன்னியாகுமரியில் இருந்து காரின் மூலம் பணக்குடிக்கு வந்தார். இவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பணக்குடியில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’.
- இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
A glimpse of dubbing ?️ session from INDIAN-2 ?? ft. Ulaganayagan @ikamalhaasan ? & Director @shankarshanmugh ?
— Lyca Productions (@LycaProductions) October 9, 2023
Dubbing in Progress ███░░#Indian2 ?? @anirudhofficial @dop_ravivarman @LycaProductions #Subaskaran @RedGiantMovies_ @gkmtamilkumaran @MShenbagamoort3 pic.twitter.com/kGlMKbWcC1
- மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
- 13 கட்டுகள் போட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் புகை மற்றும் போதைப்பொருட்கள், ரத்தம் தெறிக்கும், ஆபாச வார்த்தைகள் என 13 கட்டுகள் போட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது.
- ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார்.
- இந்த படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25-வது படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
A dream comes true. Thanks ulaganayagan @ikamalhaasan sir for launching #GV25 produced by my own company @ParallelUniPic along with @zeestudiossouth directed by @storyteller_kp .stay tuned for tomorrow.. pic.twitter.com/hQrrthtKmA
— G.V.Prakash Kumar (@gvprakash) October 9, 2023
ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படலாம்.
- அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படம் தொடர் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.
ஜவான் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1117 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஜவானின் தொடர் வசூல் சாதனை ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
Another day, another successful streak at the box office. That's Jawan for you! ?
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) October 9, 2023
Book your tickets now!https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/tuND8lxN3J
- ஜி.வி.பிரகாஷ் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
- இவர் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் 25-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜி.வி.பிரகாஷின் 25-வது படத்தை 'காதலிக்க யாருமில்லை' படத்தை இயக்கியுள்ள கமல் பிரசாத் இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்ய பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
- ஜென்டில்மேன்-2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
- இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.
இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜென்டில்மேன்-2'. இப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார். இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 9) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது. தமிழக தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர் டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, வைரமுத்து ஆக்ஷன் சொல்ல படபிடிப்பு ஆரம்பமானது. முதல் காட்சியில், நாயகன் சேத்தன், நாயகி நயந்தாரா சக்ரவர்த்தி பங்கு பெற்றனர்.
இப்படம் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியதாவது, "ஐ.நா சபையில் ஒலிக்க வேண்டிய ஒரு பாடலை இந்த படத்தில் எழுதி இருக்கிறேன். புவி வெப்பமாதலில் இந்த உலகம் உருகப்போகிறது. புவி வெப்பமாதலை தடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய முதல் செய்தி பூமியில் மரம் நடுதல். அந்த மரம் நடுதலை தான் அப்துல்கலாம் முன்மொழிந்தார். உலகம் வழி மொழிந்தது. என் கவிதைகளும் பாடல்களும் மரம் நடுவதை அதிகமாக வற்புறுத்தியிருக்கின்றன. இந்த படத்தில் ஒரு பரதநாட்டிய பாடலுக்கு மரம் நடுவதற்கு ஒரு பாட்டு எழுதியுள்ளேன். அந்த பாட்டு எல்லா கல்லூரிகளிலும் மாணவிகள் இனி ஆடுவார்கள் என்று நிச்சயமாக கருதுகிறேன்" என்று பேசினார்.
- இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘யாத்ரா -2’.
- இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'யாத்ரா'. இந்த படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இதில், ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.
யாத்ரா 2 போஸ்டர்
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்பாகம் ஆந்திர முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது. இதில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'யாத்ரா -2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் மம்முட்டி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் பிப்ரவரி 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Presenting the first look of #Yatra2. In cinemas worldwide from 8th Feb, 2024.#Yatra2FL #Yatra2OnFeb8th #LegacyLivesOn @JiivaOfficial @ShivaMeka @MahiVraghav pic.twitter.com/4m4PhJsurF
— Mammootty (@mammukka) October 9, 2023
- 1978-ம் ஆண்டு நடிகை ஜெயபாரதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ரதி நிர்வேதம்'.
- அதே திரைப்படம் மீண்டும் 2011-ம் ஆண்டு நடிகை ஸ்வேதா மேனன் கவர்ச்சியில் மீண்டும் வெளியானது.
மலையாளத்தில் 1978-ம் ஆண்டு நடிகை ஜெயபாரதி நடிப்பில் வாலிபர் ஒருவருக்கு தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுடன் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு 'ரதி நிர்வேதம்' படம் வெளியானது.
அதே திரைப்படம் மீண்டும் 2011-ம் ஆண்டு நடிகை ஸ்வேதா மேனன் கவர்ச்சியில் மீண்டும் வெளியானது. இந்த திரைப்படம் மலையாளம் தெலுங்கு தமிழ் என தென்னிந்திய மொழிகளில் அதிக வசூலை குவித்தது. இன்றளவும் இளைஞர்களின் மத்தியில் 'ரதி நிர்வேதம்' படத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் 'ரதி நிர்வேதம்' படத்தை ஆந்திராவில் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர். 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது. கேரளாவில் உள்ள திரையுலக ஆர்வலர்களும் படத்தை அந்த மாநிலத்தில் மீண்டும் வெளியிட எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா -2’.
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடல் வெளியாகியுள்ளது. விவேக் வரிகளில் தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.