search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கியுள்ள திரைப்படம் ’வாழ்வு தொடங்குமிடம் நீதானே’.
    • இப்படம் நாளை ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.

    நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக நடித்துள்ள திரைப்படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'. இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கியுள்ள இப்படத்தை நீலிமா இசை தயாரித்துள்ளார். இப்படம் நாளை (செப்டம்பர் 28) ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.


    இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் ஷார்ட் ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குனர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி கே பி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசியதாவது, 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் கதையை இயக்குனர் எனக்கு விவரித்த போதே எனக்கு பிடித்திருந்தது. ஏனெனில் நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதே தருணத்தில் இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் பலர் எல்.ஜி.பி.டி எனும் பிரத்யேக சமூக குழுவில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். இந்தப் படத்தை தயாரித்த ஷார்ட் ஃபிளிக்ஸ் மற்றும் இசை பிக்சர்ஸிற்கு நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் போது அயராது பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்'' என்றார்.


    நடிகை நிரஞ்சனா நெய்தியார் பேசுகையில், இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஷகிரா மற்றும் வினோதா கதாபாத்திரங்களை இயக்குனர் ஜெயராஜ் பழனி நேர்த்தியாக கையாண்டிருந்தார். இதில் ஷகிரா கதாபாத்திரத்தில் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று மேலும் இது போன்ற திரைப்படங்கள் வருவதற்கு உந்துதலாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான சமுதாய நடைமுறையில் இருந்து வித்தியாசமாக இயங்கும் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன் என்றார்.

    • ஈரம், வல்லினம், ஆறாவது சினம் போன்ற படங்களை இயக்கியவர் அறிவழகன்.
    • இவர் தற்போது ’சப்தம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    ஈரம், வல்லினம், ஆறாவது சினம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் அறிவழகன். இவர் தற்போது 'சப்தம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குனர் அறிவழகன் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஹாரர், திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் 'சப்தம்' படத்தின் அப்டேட்கள் வெளியாகும். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நடிகை நித்யா மேனன் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் அவருடன் நடித்த தமிழ் பட நடிகர்களை பட்டியலிட தொடங்கினர்.


    நித்யா மேனன் பதிவு

    இந்நிலையில், இந்த செய்தியை நித்யா மேனன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், " இது முற்றிலும் தவறான வதந்தி. இது மாதிரியான ஒரு நேர்காணலை நான் கொடுக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன.
    • பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

    இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது.

    இந்நிலையில் நடிகர் விஜய்யின் லியோ பட இசை வெளியீட்டு விழாவினை நடத்தப்போவதில்லை என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்கிறோம். நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

    • நடிகை பூஜா ஹெக்டே பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் கடைசியாக 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படத்தில் நடித்தார்.

    தமிழில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தனது இரண்டாவது படமான 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். பாலிவுட்டில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே கடைசியாக சல்மான் நடிப்பில் வெளியான 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.



    பூஜா ஹெக்டே சமீபத்தில் கர்நாடகா கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் இவரின் காதல் குறித்து இணையத்தில் வதந்தி பரவி வருகிறது. அதாவது, மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

    ஆனால், இதுவரை அந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த தகவலுக்கு பூஜா ஹெக்டே மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சினிமா துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.
    • இவர் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவர் நடித்த தேன் மொழி கதாப்பாத்திரம் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "தெலுங்கு திரையுலகில் நான் எந்த விதமான பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். தமிழ் ஹீரோ ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்" என்று பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • கிங் ஆஃப் கோதா' திரைப்படம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.


    • வசந்த் ரவி வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
    • ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

    வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான வசந்த் ரவி வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரின் அறிமுக படமான தரமணி பலரின் பாராட்டை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து வெளியான ராக்கி மற்றும் அஸ்வின்ஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் யார் இந்த வசந்த் ரவி என்ற கேள்வியையும் எழ வைத்தது.


    இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் அர்ஜூன் முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.


    ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வசந்த் ரவி. வெப்பன் எனும் படத்தில் சத்யராஜுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிக அளவு துப்பாக்கிகளை கையாளும் சண்டைக் காட்சிகளில் இவர் நடித்துள்ளாராம். இதற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய இயக்குனருடன் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி உள்ளாராம் வசந்த ரவி.

    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    திரையுலகின் பிரபலங்களான நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர். உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளின் பழைய (Throwback) புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் வஹீதா ரஹ்மான்.
    • இவர் கடைசியாக தமிழில் 'விஸ்வரூபம் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவர் வஹீதா ரஹ்மான். செங்கல்பட்டில் பிறந்த இவர் பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.


    எம்.ஜி.ஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் நடித்துள்ள வஹீதா ரஹ்மான் கடைசியாக தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'விஸ்வரூபம் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற உயரிய விருதுகளையும் வென்றுள்ளார்.

    இந்நிலையில், நடிகை வஹீதா ரஹ்மானுக்கு 'தாதா சாகேப் பால்கே' வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


    இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் தற்போது வரை படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. இப்படம் கைவிடப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்ததையடுத்து சமீபத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ஆம் தேதி அபுதாபியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறையாவது படப்பிடிப்பு தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதனை ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டி கொண்டாடினர்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சமூக வலைதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.


    இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் 50-வது நாளை ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், படம் பார்க்க வந்தவர்களுக்கு குலுக்கல் முறையில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை ரஜினி ரசிகர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

    ×