search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அனிமல்.
    • இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அனிமல் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அனிமல்' திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா 'கீதாஞ்சலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • ’சந்திரமுகி -2’ திரைப்படம் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, சந்திரமுகி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்பந்தமே இல்லை. சந்திரமுகி என்ற பெயர் மட்டுமே ஒன்றாக இருக்கும். ஜோதிகா, சந்திரமுகியாக நினைத்துக் கொண்டார். ஆனால், இந்த பாகத்தில் உண்மையான சந்திரமுகி வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. வேட்டையன் கதாபாத்திரத்தில் சிறிய சஸ்பென்ஸ் இருக்கிறது.


    ரஜினி சார் நடிப்பை விட அதிகமாக நடிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. அது வரவும் செய்யாது. அவரது நடிப்பை அடித்துக்கொள்ள முடியாது. ரஜினி சார் ரஜினி சார் தான். மாமன்னன் பட வடிவேலுவுக்கும் சந்திரமுகி வடிவேலுவுக்கும் என்ன வித்தியாசம் என்றால் 'மாமன்னன்' படத்தில் வடிவேல் அழுதால் நமக்கு அழுகை வரும் சந்திரமுகியில் வடிவேல் அழுதால் நமக்கு சிரிப்பு வரும்" என்று கூறினார்.

    • இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இப்படத்தின் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில், "நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்.. நீ படையா வந்தா சவ மழ குவியும் " என்று பதிவிட்டு பாடல் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
    • இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.


    துருவ நட்சத்திரம் போஸ்டர்

    இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இதையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.


    இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இதுவரை ரூ.900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில், ஒருவர் 'ஜவான்' படத்தின் கடைசி பாடலை பகிர்ந்து, "ஹேய், விக்ரம் ரத்தோர், நீ ஆசாத் மற்றும் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதை ஐஸ்வர்யா சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்லுவாய்? என்று கேள்வி எழுப்பினார்."


    அதற்கு ஷாருக்கான், "நான் மிகவும் ரொமாண்டிக் மற்றும் மனதளவில் பெண்களுக்கு அதிகமாக மதிப்பு கொடுப்பவன் என்று அவளுக்கு தெரியும். நான் செய்யும் குறும்பு தனங்களால் அவள் மகிழ்ச்சியடைவாள். நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’.
    • இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 37 நிமிடம் உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
    • அவர் மறைவிற்கு பிறகு போத்ராவின் மகன் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருண் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தனர். அதில் பிரபல பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் இவர்கள் இருவருக்கும் எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    அவர் மறைவிற்கு பிறகு போத்ராவின் மகன் இந்த வழக்கை நடத்தி வருகிறார். இந்த வழக்கின் விசாரணைக்காக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆஜராகவில்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகாததால் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் செல்வமணி நேரில் சரணடைந்தார். மேலும் அவர் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது.

    • நடிகை சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.


    பின்னர் 'மாரி 2', 'என்.ஜி.கே', 'கார்க்கி' என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜையின் போது நடிகை சாய்பல்லவியும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை கிராப் செய்த சிலர் இவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.


    இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நான் வதந்திகளை கண்டுகொள்வது இல்லை, ஆனால் குடும்பத்தை போன்று இருக்கும் நண்பர்களை குறித்து வதந்திகள் பரவும் போது அதை பற்றி நான் பேச வேண்டும். என் படப்பிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டுமென்றே கிராப் செய்து காசுக்காகவும் அருவருப்பான நோக்கத்துடனும் பரப்பி வருகின்றனர். என் அடுத்தடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் என்கிறபோது இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாகவுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • நடிகர் அஜித் நடிப்பதை தாண்டி பைக் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
    • சமீபத்தில் இவர் ஓமன் நாட்டில் பைக்கில் செல்லும் வீடியோ வைரலானது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பதை தாண்டி பைக் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். பைக் பிரியராக இருக்கும் அஜித் உலக சுற்றுப்பயணம் சென்றார். சமீபத்தில் இவர் ஓமன் நாட்டில் பைக்கில் செல்லும் வீடியோ வைரலானது.


    இந்நிலையில், நடிகர் அஜித், ஓமன் நாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இவர் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிவரும் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும், 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் அவர் சென்னை திரும்பியுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    நடிகர் அஜித், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது, "மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன். 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் அவரை சந்தித்ததற்கு பின் எனது மனநிலை மாறிவிட்டது. உன்னால முடியும் நீ போய் பெரிய படம் பண்ணு என்ற நம்பிக்கை அளித்தது அவர்தான்" என்று பேசினார். 

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’.
    • சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து 'லவ் டுடே' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.


    இந்நிலையில், சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த படங்களை பட்டியலிட்டிருந்தார். அதில் பிரதீப் ரங்கநாதன் பெயர் இல்லாததை பார்த்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, 'லவ் டுடே' படமும் ரூ.100 கோடி வசூலித்ததாக பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக தனது இரண்டாவது படத்திலே ரூ. 100 கோடி கிளப்பில் பிரதீப் ரங்கநாதன் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

    • விஷால் சொத்துக்கணக்கு மற்றும் வங்கிக் கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. இந்த தொகையை திருப்பித் தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் வேறு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, விஷால் சொத்துக்கணக்கு மற்றும் வங்கிக் கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இருநீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட இடைக்கால தடையும் விதித்தது.

    லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, விஷால் நேரில் ஆஜரானார். அப்போது, அவரது சொத்துக் கணக்கு, வங்கி கணக்கு விவரங்களை 19-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    ஆனால், கடந்த 19-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. அவர் தரப்பில் வக்கீல்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஷாலை நேரில் ஆஜராக மீண்டும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் ஆஜராகினார். அவர் தரப்பில் இளம் வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ''19-ந்தேதி சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தாக்கல் செய்ய உத்தர விட்டும், தாக்கல் செய்யவில்லை. வக்கீல்களும் ஆஜராகவில்லை. இந்த ஐகோர்ட்டின் உத்தரவை விஷால் வேண்டுமென்றே அலட்சியம் செய்கிறார். இந்த ஐகோர்ட்டை பொறுத்தவரை அனைவரும் சமம்தான். பெரியவர், சின்னவர் என்ற பாகுபாடு கிடையாது. அதனால், விஷால் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பேன்'' என்று எச்ரிக்கை செய்தார்.

    அதற்கு வக்கீல், நேற்று அனைத்து விவரங்களும் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என் றார். உடனே நீதிபதி, அதற்கான ஆதாரம் எங்கே? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

    ×