என் மலர்
சினிமா செய்திகள்
- ஏ. ஆதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விருது’.
- இந்த படக்குழு தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.
ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஏ.டி.ஆதிநாடார் தயாரித்த முதல் படம் விருது. இந்தப் படம் வெளிவந்து தியேட்டர்களில் 40 நாள் வெற்றிகரமாக ஓடி லாபத்தை கொடுத்தது. இப்போது 'உலகநாதன்' என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் தயாரித்திருக்கிறார்கள்.
கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் கலந்த பேமிலி படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை மற்றும் இராஜபாளையத்தைச் சுற்றியுள்ள அழகான பகுதிகளில் நடைபெற்றுள்ளது. விருது படத்தை இயக்கிய ஏ. ஆதவன் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். விருது படத்தில் கதாநாயகனாக நடித்த அட்சயன் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக யோகதர்சினி, கிரேட்டா இரண்டு புதுமுக நாயகிகளும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
மேலும், கஞ்சா கருப்பு, விஜய் டி.வி. புகழ் சசிகலா, வில்லனாக புதுமுக நடிகர் கடற்கரை மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகன் சிலம்பம் பயிற்சி முழுமையாக பெற்றவர் என்பதால் சிலம்பம் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் அவரே நடித்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கணேஷ் சாய் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் 'ஹனு-மான்'.
- இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹனு-மான் போஸ்டர்
இந்நிலையில், 'ஹனுமான்' பட தயாரிப்பு நிறுவனம் ரசிகர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பண்டிகை கொண்டாட்டமாக ஒரு கச்சிதமான போஸ்டரை வெளியிட்டு, படத்திற்கான விளம்பரங்களைத் தொடங்கியுள்ளனர். இந்த போஸ்டரில் தேஜா சஜ்ஜா ஒரு மாறுபட்ட பாரம்பரிய அவதாரத்தில் தோன்றியுள்ளார். மேலும் அவர் விநாயகர் சதுர்த்தி விழாவை, ஒரு பெரிய கூட்டத்துடன் கொண்டாடுகிறார். இந்த போஸ்டரை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- விஜய் ஆண்டனி மகள் மீரா இன்று தற்கொலை செய்துகொண்டார்.
- இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவரது மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மீராவின் உடல் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி -மீரா
இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், 'லியோ' படக்குழு தங்களது சமூக வலைதளத்தில் மீராவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று வெளியிடவுள்ள போஸ்டரை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து வெற்றி நடைபோட்டு வருகிறது.
- தற்போது கோலாகலமாக ஜூனியர் சூப்பர் சிங்கர் 9- வது சீசன் நடைபெற்று வருகிறது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. தற்போது கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9- வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் வெகு நெகிழ்வான தருணமாக, இளம் பாடகி ஹர்ஷினி நேத்ராவை, நேரில் பாராட்டி மகிழ்ந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
சாதி மறுப்பு திருமண தம்பதியின் மகள் ஹர்ஷினி நேத்ரா, எளிமையான குடும்பத்தைச்சேர்ந்த சிறுமி. விழுப்புரம் நகரைச் சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது. சமூகத்தில் பல இன்னல்களைத் தாண்டி, பல புறக்கணிப்புகளைத் தாண்டி, தங்கள் மகள் ஹர்ஷினி நேத்ராவை இசையில் ஊக்கப்படுத்தி வருகின்றனர் அந்த தம்பதி.
தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னதாக மிமிக்ரி குரலில் பாடி ஆச்சரியப்படுத்தினார். தன் வாழ்வின் வலியைச் சொல்லும் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடி நடுவர்களைப் பிரமிக்க வைத்தார். முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன், பரியேறும் பெருமாள் படங்களிலிருந்து பாடல்களைப் பாடி அசத்தினார்.
ஹர்ஷினி நேத்ரா பாடிய பாடல்களின் வீடியோவை நடுவர் ஆண்டனி தாசன், இயக்குனர் மாரி செல்வராஜுக்கு அனுப்பியிருந்தார். ஹர்ஷினி நேத்ராவின் பாடல்களில் ஈர்க்கப்பட்ட மாரி செல்வராஜ் இந்த வார நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக கலந்துகொண்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் டெடிகேசன் ரவுண்ட் நடைபெற்றது. இந்த ரவுண்டில் பாடகர்கள் தங்களுக்குப் பிடித்த எவருக்கு வேண்டுமானாலும் பாடல்களை டெடிகேட் செய்து பாடலாம்.
இந்த நிகழ்ச்சியில் தனது பெற்றோருக்கு டெடிகேட் செய்து, மாமன்னன் படத்திலிருந்து நடிகர் வடிவேலு பாடிய 'தன்தானத்தானா' பாடலை பாடினார். ஹர்ஷினியின் பாடலை மேடையின் பின்னாலிருந்து மாரி செல்வராஜ் டிவியில் பார்த்தார். இயக்குனர் மாரி செல்வராஜ் நிகழ்ச்சிக்கு வந்திருப்பது, நடுவர்கள் உட்பட எவருக்கும் தெரியாது. ஹர்ஷினி நேத்ரா பாடி முடித்தவுடன் சர்ப்ரைஸாக மேடையேறிய இயக்குனர் மாரி செல்வராஜ் அவரை கட்டியணைத்துப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது:-
ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது, நம் கருத்து அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று தான் உருவாக்குகிறோம், உண்மையில் இன்றைய தலைமுறை அதைப்புரிந்து கொள்வதை நேரில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த குடும்பம் என்ன வலி அனுபவித்திருக்கும், இந்த குழந்தை என்ன மனநிலையில் இருப்பாள் என்பது எனக்குத் தெரியும், நானும் மேடைக்காக ஏங்கியவன் இன்று இந்த குழந்தை தன் உழைப்பில், இந்த மேடையைப் பெற்றிருக்கிறாள் என்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. யாருக்கும் பயப்படாமல், எந்த தடை வந்தாலும் கவலைப்படாமல் முன்னேறிப்போக வேண்டும் என ஹர்ஷினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.
- அக்டோபர் 3ம் தேதி வரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.
பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎஃப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது.
பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, அக்டோபர் 3ம் தேதி வரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.
- இயக்குனர் பாலா 'வணங்கான்' படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் பாலா பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்… பாலா எச்சரிக்கை.
பாலா அறிக்கை
தற்போது இயக்குனர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குனர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார். இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இயக்குனர் பாலாவின் கவனத்திற்கு வந்தன.
பாலா போலி கணக்கு
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்கும்படியும் இயக்குனர் பாலா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பொதுவாக தனது திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை அவரின் உதவி இயக்குனர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்புகொண்டு வருகிறார்கள். அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக தனது திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இது போன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.. விழிப்புணர்வுடன் இருங்கள்" என்று இயக்குனர் பாலா கேட்டுக் கொண்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினி.
- இவர் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் தன் திறமையினாலும் ஸ்டைலினாலும் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரசிகர்கள் இவரை 'சூப்பர் ஸ்டார்' என்று அன்போடு அழைத்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.
தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இவர் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படப்பிடிப்புகளை முடித்த ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா நடிகர் ரஜினிக்கு வழங்கி கவுரவித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் பாபு.
- பாபு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்.
பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என் உயிர் தோழன்'. இந்த படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவை கதாநாயகனாக்கி படத்தை வெற்றி படமாக மாற்றினார் பாரதிராஜா. அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முத்திரை பதித்தவர் பாபு.
அன்றிலிருந்து 'என் உயிர் தோழன்' பாபு என்ற பெயருடன் வலம் வந்த இவர் விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் கதாநாயகான நடித்தார். நான்கு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பாபு 5-வது படத்தில் தனது திரை வாழ்க்கையே தொலைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பாபு
கடந்த 1991-ல் 'மனசார வாழ்த்துக்களேன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்டை காட்சி ஒன்றில் பாபு, மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இதில் நானே குதிக்கிறேன் என்று பாபு தயாராகினார். ஆனால், படப்பிடிப்பு குழுவினர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறி டூப் நடிகரை தயார்படுத்தியுள்ளனர். பாபு நானே குதிக்கிறேன் என்று குதித்த போது
டைமிங் மிஸ் ஆனதால், வேறு இடத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்.
பாரதிராஜா - பாபு
இந்நிலையில், நடிகர் பாபு இன்று காலமானார். இவருக்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த " என் உயிர் தோழன் பாபு "வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.
- விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்துகொண்டார்.
- அவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மீராவின் உடல் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
மீராவின் உடல் இன்று மாலை அல்லது நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு திரைப்பிரபலங்கள் நேரில் ஆறுதல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'.
- இப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிஜோ ஜோஸ் 'ஜல்லிக்கட்டு', 'அங்கமாலி டைரிஸ்', 'சுருளி','நண்பகல் நேரத்து மயக்கம்' போன்ற பல படங்களை இயக்கி கவனம் பெற்றார். இவர் தற்போது 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மோகன் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மலைக்கோட்டை வாலிபன் போஸ்டர்
இந்நிலையில், 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. வித்தியாசமான லுக்கில் மோகன்லால் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The countdown has begun!
— Mohanlal (@Mohanlal) September 18, 2023
Vaaliban is arriving in theatres worldwide on 25th January 2024!#VaalibanOnJan25#MalaikottaiVaaliban@mrinvicible @shibu_babyjohn @achubabyjohn @mesonalee @danishsait #johnandmarycreative #maxlab @VIKME @sidakumar @YoodleeFilms @saregamasouth… pic.twitter.com/8UXJciVVma
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.50 கோடியே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விஜய் ஆண்டனி - மீரா
ஆனால், மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "இந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு எழுந்தேன். விஜய் ஆண்டனி சார் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.