search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    அதன்படி, 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தோரி போரி' பாடலின் லிரிக் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • நடிகை ஆத்மிகா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன்பின்னர் கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆத்மிகா அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    இறை நம்பிக்கை அதிகம் கொண்ட நடிகை ஆத்மிகா நேரம் இருக்கும்போது கோவில்களுக்கும் சென்று வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆத்மிகாவின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி பேசுப்பொருளாகியுள்ளது.
    • ஏ.ஆர்.ரகுமானுக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமானுக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுகள் கேள்வி கேட்கப்பட வேண்டியவைதான். எப்போதும் தன் சார்ந்து நடக்கும் நிகழ்வுகளில் மிகக் கவனமாக இருப்பவர் இந்தமுறை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நம்பிவிட்டதில் ஏகப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றிற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. ஏ.ஆர்.ரகுமானும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இருந்தும் சிலர் இந்த நிகழ்வை வைத்துக் கொண்டு வன்மத்தைக் கக்கத் தொடங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.


    ஆஸ்கார் விருது விழா மேடையில் தமிழில் பேசி பெருமைப்படுத்திய மாபெரும் கலைஞனை இவ்வொரு நிகழ்வை வைத்து அசிங்கப்படுத்துவது மிக மிகத் தவறான செயல். இத்தனை வருட சாதனைகளை ஒருங்கிணைப்பாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு நிகழ்வால் இழந்துவிட்டதாகப் பேசுவது சரியானதல்ல.

    நிகழ்விற்குப் பொறுப்பேற்று சீர்செய்யும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளபோது மலிவான அரசியல் செய்யும் சிலரின் சந்தர்ப்பவாத பேச்சுக்கு நாமும் ஒத்து ஊதுவது கேவலமான நாகரீகமற்ற செயல். அவரது சாதனைகளைக் கூட விட்டுவிடுங்கள்... மனிதாபிமான செயல்களை எடுத்துக்கொண்டால் அவதூறு பேசும் நாக்குகள் சற்று கூசவே செய்யும்.

    2016 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி வழங்கினார். 2018- இல் கேரள மக்கள் பாதிக்கப்பட்ட போது இசை நிகழ்ச்சி நடத்தி நிதி உதவி வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் நிறைய குடும்பங்களுக்கு உதவியுள்ளார். லைட் மேன் யூனியனுக்கு இசைநிகழ்ச்சி நடத்தித் தந்துள்ளார். ஒற்றை நிகழ்வால் சர்வதேச புகழ் கொண்ட ஒரு நாயகனை ஸ்கேமர் என அழைப்பது சரியான செயலா என சிந்தியுங்கள். நிகழ்ந்த தவறுகளை சரிசெய்ய நேரம் கொடுங்கள். அவராகவே முன்வந்து சரிசெய்யக்கூடியவர்தான்.

    நம்மில் ஒருவரை நாம் தாங்கிப் பிடிக்க வேண்டிய நேரம் இது. வன்மம் பிடித்தவர்களின் நாக்குகளுக்கு நாமும் இரையாக வேண்டாம். மாபெரும் கலைஞனின் சிறு சறுக்கலுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை. அதேபோல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று மக்களின் பாதிப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் விஜய் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.


    இந்நிலையில், நடிகர் விஜய் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் இவர் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு 'லியோ' இசை வெளியீட்டு விழாவிற்காக விஜய், சென்னை திரும்பியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • லைகா நிறுவனம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.
    • விஷால் தரப்பில் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஒரு மத்தியஸ்தர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    நடிகர் விஷால் தன்னுடைய 'விஷால் பிலிம் பேக்டரி' பட தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் கடனை பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டதுடன் கடனை திருப்பி செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

    ஆனால், கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.


    இந்த வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இருநீதிபதிகள் அமர்வு 15 கோடியை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிடக் கூடாது என்று தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளின்படி சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யவில்லை, 15 கோடி ரூபாயை இதுவரை உயர் நீதிமன்றத்துக்கு செலுத்தவில்லை, தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்த அதே நாளில் ஒரு கோடி ரூபாயை விஷால் வங்கி கணக்கில் பெறப்பட்டுள்ளது, இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவிப்பது என, நடிகர் விஷாலின் செயல்பாடு குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.



    இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உயர் நிதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரலில் 15 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய உத்தரவை உறுதி செய்த பிறகும், சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

    விஷால் தரப்பில் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஒரு மத்தியஸ்தர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லைகா நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை எப்படி செலுத்தப்படும் என்றும் நீதிபதி உத்தரவுபடி 15 கோடி ரூபாய் செலுத்தாவிட்டால் படங்கள் வெளியிட தடை விதிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இறுதியாக விஷால் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த 13-ஆம் தேதி வரை அவரது நான்கு வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது சொத்துகள் குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அதுமட்டுமல்லாமல், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் தயாரிப்பிற்கும் விஷாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் இப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


    • 2007-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’.
    • இப்படம் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

    கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே' திரைப்படம் வெளியானது. இப்படத்தில் திரிஷா மற்று வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு இப்படம் தமிழில் 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில், தனுஷ், நயன்தாரா, ரகுவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதுவும் பெரும் வரவேற்பை பெற்றது.


    ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே

    இதனிடையே, கடந்த 2013-ம் ஆண்டு செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'நீண்ட நாட்களுக்கு பின்னர் 'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே' திரைப்படத்தைப் பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார்' என்று பதிவிட்டிருந்தார்.


    இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் செல்வராகவனின் ட்வீட்டுக்கு நடிகை த்ரிஷா 'நான் ரெடி' என பதிலளித்துள்ளார். இந்தபதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்'.
    • இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.


    புளூ ஸ்டார் போஸ்டர்

    தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'புளூ ஸ்டார்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'ரெயிலின் ஒலிகள்' நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளது.


    • ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.
    • பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.



    பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தார். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர்.

    இந்த நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததாக பலர் விமர்சித்து வந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது மகள் கதீஜா ரகுமான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததை போல சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்திற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் 100 சதவீதம் காரணம். எனினும் ஏ.ஆர்.ரகுமான் அதற்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தார்.


    கதீஜா ரகுமான் பதிவு

    ஏ.ஆர்.ரகுமான், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 2016 -ஆம் ஆண்டு சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களில் 'நெஞ்சே எழு' என்ற இசை நிகழ்ச்சி நடத்தியவர், கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018- ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்தார். திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தினார். அவர் குறித்து பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள்" என பதிவிட்டுள்ளார்.


    • விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
    • இப்படம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

    இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது, 'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    ரத்தம் போஸ்டர்

    அந்த போஸ்டரில், "சாத்தியமில்லாத எல்லாத்தையும் நீக்கிட்டா மிஞ்சிறது நம்ப முடியாத ஒன்னாருந்தாலும் அதான் உண்மை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


    • ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
    • பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.


    இதையடுத்து இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. ரசிகர்கள் பலர் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஸ்கேம் என்று சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நாம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஏ.ஆர்.ரகுமான் மீது அன்பு செலுத்தி வருகிறோம். இசை நிகழ்ச்சியின் போது நடந்தது தற்செயலானது. இதனால் ஏ.ஆர்.ரகுமான் பாதிக்கப்பட்டிருப்பார். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் என் குடும்பமும் அந்த நிகழ்ச்சியில் இருந்தது, ஆனால் நான் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்பார்கள் என்று நம்புகிறேன். நம் அனைவர் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பு செலுத்துவது போன்று ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து அன்பை தேர்ந்தெடுங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்.


    • 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு.
    • பாதுகாப்பு நடவடிக்கைகளில் நான் உட்பட கலைஞர்கள் தீவிரப் பங்கை ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த நிகழ்வை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆதரவு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரு கச்சேரியின் அளவிலான நிகழ்வை ஒழுங்கமைப்பது மிகவும் சிக்கலான பணியாகும். இது தளவாடங்கள் மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது முதல் போக்குவரத்து மேலாண்மை வரை பல நகரும் பகுதிகளை உள்ளடக்கியது. துரதிர்ஷ்டவசமாக, நிறுவன தவறுகள் உட்பட பல காரணங்களால், கூட்ட நெரிசல் மற்றும் பிற எதிர்பாராத சிக்கல்கள் இதுபோன்ற அளவிலான கச்சேரிகளின் போது நடந்துள்ளன.

    நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி சிந்திப்பது முக்கியம், கலைஞர்கள் என்ற முறையில், நாங்கள் இந்த தயாரிப்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம். எல்லாமே சீராக நடக்கவும், நாங்கள் மேடையில் இருக்கும்போது எங்கள் ரசிகர்கள் நன்றாகக் கவனிக்கப்படுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை வெளிவருவதைக் காண்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது, மேலும் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நான் உட்பட கலைஞர்கள் தீவிரப் பங்கை ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ஒரு சக இசையமைப்பாளர் என்ற முறையில், துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
    • நடிகர் ரஜினிகாந்த், மலேசியா சென்றுள்ளார்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    அன்வர் இப்ராஹிம்- ரஜினி

    இந்நிலையில், மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினி பிரதமர் அன்வர் இப்ராஹிம்மை சந்தார். அப்போது பிரதமர் அன்வர் இப்ராஹிம், நடிகர் ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தின் 'மொட்ட பாஸ்' மேனரிசத்தை செய்து காண்பித்து அவரை வரவேற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் "ஆசிய மற்றும் சர்வதேச கலையுலகில் புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


    ×