என் மலர்
சினிமா செய்திகள்
லியோ இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை திரும்பிய விஜய்?
- நடிகர் விஜய் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் இவர் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு 'லியோ' இசை வெளியீட்டு விழாவிற்காக விஜய், சென்னை திரும்பியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.