search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.


    இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.



    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது இணையப் பக்கத்தில், "என்னை சிலர் சிறந்தவர் என அழைக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்வதற்கு இந்த முறை நான் பலியாடு ஆகிறேன். உலகத் தர கட்டமைப்பு, சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் போக்குவரத்து, கூட்ட நெரிசலுக்கான மேலாண்மை, விதிகளை பின்பற்றும் ரசிகர்கள் அமைய வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்க வேண்டும். இறைவனை நாடினால் நடக்கும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ’புஷ்பா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
    • சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

    புஷ்பா 2 போஸ்டர்

    இந்நிலையில், 'புஷ்பா -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' நேற்று (செப்டம்பர் 7) ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது.

    ஜவான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் ரூ.520 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    • ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்.

    அன்வர் இப்ராஹிம் - ரஜினி

    இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    அன்வர் இப்ராஹிம் - ரஜினி

    இந்நிலையில், நடிகர் ரஜினி மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம்மை சந்தித்துள்ளார். அதாவது, மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினி பிரதமர் அன்வர் இப்ராஹிம்மை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் "ஆசிய மற்றும் சர்வதேச கலையுலகில் புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ’விடுதலை’ இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
    • இதைத்தொடர்ந்து நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை' முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.


    இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் துவக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.


    துரை செந்தில்குமார் - வெற்றிமாறன் - யுவன் சங்கர் ராஜா- சூரி - சசிகுமார் - உன்னி முகுந்தன் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    • இயக்குனர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மூன்றாம் கண்’.
    • இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

    அறிமுக இயக்குனர் சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மூன்றாம் கண்'. இந்த படத்தில் விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மூன்றாம் கண் போஸ்டர்

    ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் (Trending entertainment & White horse studios) சார்பில் கே. சசிகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அஜீஸ் இசையமைக்க என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லராக உருவாகவுள்ளது. 'மூன்றாம் கண்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    இந்த போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் கதையின் கதாப்பாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, அவர்கள் ஒரு கேள்விக்குறி போன்று, காட்சியளிக்கிறார்கள். மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

    • இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மகாராஜா’.
    • இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதி செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குனர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்த படம் உங்களுக்கு பிடித்தது போல வந்திருக்கிறது. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது.


    என் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய புள்ளியை அருள் தாஸ் அண்ணன் வைத்துள்ளார். அவரைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும் வந்துள்ளது. நட்டி சாரை பார்க்கும் பொழுது ரஜினி சாரின் அதே வேகம், ஈர்ப்பு அவரிடம் இருந்தது. பிலோமின், தினேஷ், அபிராமி, மம்தா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். நிதிலன் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று சொன்னது திமிர் கிடையாது, அவர் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது. பாய்ஸ் மணிகண்டன் அவரின் சமீபத்திய பேட்டி ஒன்று பார்த்தேன்.


    மகாராஜா போஸ்டர்

    மாடர்ன் சாமியார் போல அவ்வளவு நம்பிக்கையாக பேசியிருந்தார். அவர் இன்னும் நிறைய உயரம் அடைய வேண்டும். அனுராக் சாரின் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆனால் இந்த படத்திற்காக அவர் செய்த வேலை மிகப்பெரியது. நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என விருப்பம்" என்றார்.

    • 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
    • ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.


    இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார்.


    இந்நிலையில், ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, "அன்புள்ள சென்னை மக்களே, இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். உங்கள் குறைகளை எங்கள் குழு விரைவில் நிவர்த்தி செய்யும் " என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்பு இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பியதற்கு நாங்களே பொறுப்பேற்று கொள்கிறோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் 'ஜிகர்தண்டா'. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.


    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 'டேய் இது சினிமா டா' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    • ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் பார்க்கிங் வசதி, குடிக்க தண்ணீர் என அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். ரசிகர்கள் பலரும் இசை நிகழ்ச்சி குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார். அதாவது, இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தில் விண்ணப்பம் அளித்துள்ளனர். அதில் , 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று குறிப்பட்டுள்ளது.

    ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரசிகர்கள் வந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் மாநகரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இந்த நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் வந்தார்களா? என்பது குறித்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கரணை துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்.


    ரஜினி 171 போஸ்டர்

    இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


    • 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சி நடைபெறாமலேயே இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.


    ஆனால் அன்றைய தினம் பெய்த மழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி மீண்டும் நடைபெறும் என்றும் முன்பு வாங்கிய டிக்கெட்டுகள் இதற்கு செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சி நடைபெறாமலேயே இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


    அதாவது, இருபதாயிரம் பேர் அமரக்கூடிய இடத்தில் ஐம்பதாயிரம் பேர் இருந்ததாகவும் ரூ.50,000 டிக்கெட் வாங்கியவர்கள் இருக்கும் இடத்தில் சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாடு சரியில்லை. குடிக்க தண்ணீர் இல்லை, சரியான கார்பார்க்கிங் இல்லை இப்படியான ஒரு நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்திருக்கலாம் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பல ரசிகர்கள் போக்குவரத்து நெரிசலால் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.

    ×