search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.. ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஏ.ஆர்.ரகுமான்
    X

    உங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.. ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஏ.ஆர்.ரகுமான்

    • 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
    • ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.


    இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார்.


    இந்நிலையில், ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, "அன்புள்ள சென்னை மக்களே, இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். உங்கள் குறைகளை எங்கள் குழு விரைவில் நிவர்த்தி செய்யும் " என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்பு இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பியதற்கு நாங்களே பொறுப்பேற்று கொள்கிறோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×