search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேல் 'லியோ' திரைப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.


    இந்நிலையில், 'லியோ' திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தொழிற்சாலையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகை திரிஷா ‘தி ரோட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை இயக்குனர் அருண் வசீகரன் இயக்கியுள்ளார்.

    தென்னிந்திய பிரபலமான நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் 'தி ரோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தி ரோட்' திரைப்படம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.




    • நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    மகாராஜா போஸ்டர்

    பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதி செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'மகாராஜா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நாளை வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    • நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இந்த படத்தில் நடிகர் ரஜினி கதாநாயகனாக நடித்திருந்தார்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.



    இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் அதன் இணை தயாரிப்பாளர்கள் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.
    • இவரது உடல் இன்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்படவுள்ளது.

    'எதிர்நீச்சல்' என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.


    நடிகர் மாரிமுத்து (58) நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில், மாரிமுத்துவின் குழந்தைகளை நடிகர் அஜித் படிக்க வைத்துள்ளார். இது குறித்து மாரிமுத்துவின் சசோதரர் பேசியதாவது, மாரிமுத்து ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தார். இதை நாங்கள் தாங்கி தான் ஆக வேண்டும். 'வாலி' படத்திற்கு பிறகு மாரிமுத்துவின் இரண்டு குழந்தைகளையும் 12-ஆம் வகுப்பு வரை அஜித் தான் படிக்க வைத்தார் என்று பேசினார்.

    • ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சைரன்’.
    • 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் 'சைரன்'. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.


    ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி, ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'சைரன்' படத்தின் அப்டேட் நாளை ஜெயம் ரவி பிறந்த நாளன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பால் காலமானார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    'எதிர்நீச்சல்' என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.


    நடிகர் மாரிமுத்து (58) நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது.
    • "லியோ" திரைப்படம் வாரிசை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம், வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

    லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த "வாரிசு", திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது.

    இந்நிலையில் "லியோ" திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை  படைத்துள்ளது.

    அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, " லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள். இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை  உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்" என்றது.

    • ஜான்சீனா களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம்.
    • ஜான்சீனாவுடன் சந்திப்பு குறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.

    இந்த நிலையில், "WWE சூப்பர்ஸ்டார் ஸ்பெக்டக்கில்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஐதராபாத் வந்துள்ள ஜான்சீனாவை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்துள்ளார். ஜான்சீனாவுடன் சந்திப்பு குறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "உங்களை சந்தித்தது மிகவும் பெருமையாக உள்ளது. மிகவும் அன்பாக இருந்ததற்கு மிக்க நன்றி. உங்களுக்கு கிடைக்கும் சில நிமிடங்களிலேயே அனைவரையும், சிறப்பானவர்களாக உணரச் செய்யும் உங்கள் பண்பு அருமையாக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.  

    • நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் மாரிமுத்து 'எதிர் நீச்சல்' தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

    இவர் 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு எதிர் நீச்சல் நடிகர்கள், நடிகர் சங்கத் தலைவர் நாசர், சரத்குமார், இயக்குனர் வசந்த், வையாபுரி, லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், செண்ட்ராயன் மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா மறைந்த நடிகர் மாரிமுத்து உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

    • அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' நேற்று (செப்டம்பர் 7) ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது.


    ஜவான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.129.6 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    • 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    ×