என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் சமீபத்தில் காலமானார்.
- இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94). இவர் கோவையில் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்தனர்.
சத்யராஜ் -நாதாம்பாள்
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜை நேரில் சந்தித்து அவரது தாயார் நாதாம்பாள் மறைவிற்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் விடுதலை-2 படத்தை இயக்கி வருகிறார்.
தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்திலும் சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இந்தியா என்ற பெயரே போதுமானது என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "இந்தியா என்ற பெயரே எனக்கு போதுமானதாக இருக்கிறது. தேசிய விருதுகள் குறித்து எனக்கு வேறு விதமான கருத்து இருக்கிறது. நாம் ஒரு படத்தை தேர்வுக்கு அனுப்பும் போது தேர்வுக்குழுவின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்ற ஒப்புதலுடன் தான் அனுப்புகிறோம். அந்த தேர்வு குழு சிறந்த தேர்வு குழுவா? இல்லையா? சரியாக தேர்ந்தெடுக்கிறார்களா? என்பது அடுத்தக் கட்டம்.
நான் ஒரு படத்தை அனுப்புகிறேன் என்றால் இந்த தேர்வுக்குழுவின் தீர்ப்பு இறுதியானது என்று ஏற்றுக் கொண்டுதான் அனுப்புகிறோம். பிறகு அந்த படத்திற்கான விருது கிடைக்கிறது இல்லை என்பது அந்த தேர்வுக்குழுவின் முடிவு. ஒரு தேர்வுக்குழுவின் முடிவு நிச்சயமாக ஒரு படத்தின் தரத்தை, அந்த படத்தின் சமூக பங்களிப்பை தீர்மானிப்பது இல்லை. 'ஜெய்பீம்' படம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் தொடங்கினார்களோ அதை அந்த படம் செய்துவிட்டது" என்று பேசினார்.
- சீமான் மீது புகார் அளித்த விஜயலட்சுமி அளித்த பேட்டியில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
- பரிசோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீதான புகாரில் மேல் நடவடிக்கைக்கு போலீசார் தயாராகி வருகிறார்கள்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பாக மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் மேற்பார்வையில் விஜயலட்சுமி அளித்துள்ள புகார் மீது அடுத்தடுத்து போலீசார் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சீமான் மீது புகார் அளித்த விஜயலட்சுமி அளித்த பேட்டியில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக போலீஸ் விசாரணையிலும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் நடந்தது என்ன? என்பது பற்றி விஜயலட்சுமி கடந்த வாரம் வாக்குமூலம் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகார் மீது போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதை தொடர்ந்து விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இதன்படி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலையில் விஜயலட்சுமி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த பரிசோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீதான புகாரில் மேல் நடவடிக்கைக்கு போலீசார் தயாராகி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்த போது 5 தனிப்படையினர் அங்கு விரைந்திருந்தனர். இதனால் சீமான் மீது கைது நடவடிக்கை பாய இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது சம்மன் கொடுப்பதற்காகவே கோவை சென்றுள்ளோம் என்று தெரிவித்தனர். ஆனால் சீமான் தரப்பில் சென்னைக்கு வந்த பின் சம்மனை வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சீமான் மீதான புகாரில் விஜயலட்சுமிக்கு போலீசார் திடீரென மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜயலட்சுமி புகாரில் போலீசார் அடுத்து மேற்கொள்ள உள்ள நடவடிக்கை என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்.
- இவர் 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான தலைவி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
கங்கனா
தற்போது இவர் 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார்.
இந்நிலையில், கங்கனாவை நேரில் சந்தித்தால் கன்னத்தில் அறைவேன் என பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா தெரிவித்துள்ளார். அதாவது, நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்.
நவுஷீன் ஷா
அவர் எங்கள் நாட்டைப் பற்றியும் பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் சர்ச்சையான கருத்துகளை கூறுகிறார். மற்ற நாட்டைப் பற்றி எதற்காக அவர் பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள்." என ஆதங்கமாக பேசியுள்ளார்.
- நடிகை நயன்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் உள்ளன.
- இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜவான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்பம் வெற்றி பெறுவதற்காக நயன்தாரா, ஷாருக்கான் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இவ்வளவு நாட்கள் சமூக வலைதளத்தில் நாட்டம் கொள்ளாத நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கினர். இதையடுத்து தன் குழந்தைகளுடன் கொண்டாடும் பண்டிகைகளின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகன்கள் உயிர் மற்றும் உலக்கிற்கு பட்டு வேட்டி அணிவித்து குட்டி கிருஷ்ணர்களாக அலங்கரித்து அவர்கள் பூஜை அறைக்கு தவழ்ந்து செல்லும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
- ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர்.
இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. 'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றிருந்த மிகப்பெரிய ஹிட் அடித்த 'காவாலா' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் மூன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜவான் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.
- ஷாருக் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜவான் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் அமோகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய தகவல்களின் படி, ஜவான் படத்திற்கு முன்பதிவில் இருந்தே ரூ. 50 கோடிக்கும் அதிக வசூல் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை நடைபெற்று இருக்கும் முன்பதிவு மற்றும் மென்பொருள் சிக்கல் என பல்வேறு காரணங்களால் முழு தொகையை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் நாள் காட்சிக்கு நடைபெற்ற அதிகளவு முன்பதிவு என்ற சாதனையை ஜவான் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் நாளை (செப்டம்பர் 7) வெளியாகிறது. இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- ஆக்சன், வில்லி, கிளாமர் என அனைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் அசத்தி வருபவர் சாக்ஷி அகர்வால்.
- கடந்த ஆறு மாதத்தில் அவர் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் மூலம் பட்டி தொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். தற்போது தமிழ் திரையுலகின் வளர்ந்துவரும் இளம் நடிகையாக அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்சன், வில்லி, கிளாமர் என அனைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் அசத்தி வரும் சாக்ஷி, தென்னிந்திய சினிமாவின் ஹாட் ஹீரோயினாக மாறி வருகிறார்.
கடந்த ஆறு மாதத்தில் அவர் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் "நான் கடவுள் இல்லை" படத்தில் முழுநீள ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றிய அவர், தனது அற்புதமான நடிப்பில் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காட்டினார். அதே போல் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து, சமீபத்தில் வெளியான 'பஹீரா' படத்தில் எதிர்நாயகியாக வில்லி வேடத்தில் அனைவரையும் அதிர வைத்தார். தற்போது ஹங்கமா (hungama) ஓடிடியில் வெளியாகியுள்ள "என் எதிரே ரெண்டு பாப்பா" படத்தில் ஹாட் கிளாமர் ஹீரோயினாக கலக்கியிருக்கிறார்.
எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொள்ளும் சாக்ஷி அகர்வால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கலக்கி வருகிறார் சாக்ஷி.
சமீபத்திய திரைப்படங்கள் குறித்து அவர் பேசியதாவது:-
"பிக்பாஸ் எனக்கு மிகப்பெரிய அடையாளம், பிக்பாஸ் எல்லோரிடமும் என்னை பற்றி அறிமுகம் தந்தது. பிக்பாஸ் அறிமுகத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது. உண்மையில் என் திரைப்பட வாய்ப்புக்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. திரைப்படம் என்பது எனது கனவு. அதனால் தான் டான்ஸ், ஆக்சன் கற்றுக்கொள்ள தனியாக கிளாஸ் போய்க்கொண்டிருக்கிறேன். "நான் கடவுள் இல்லை" படத்தில் நான் நடித்த ஆக்சன் காட்சிகள் நன்றாக இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி."
பல மொழிகளில் நடிக்கிறீர்களே, மொழிப்பிரச்சனை இருக்கிறதா?
"அப்படியெல்லாம் தோன்றியதில்லை. தென்னிந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இங்கு வாழ்க்கை ஒன்று தான். கலைஞர்கள் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். மொழிப்பிரச்சனை எனக்கு பெரிதாக தெரிந்ததே இல்லை. "
உங்கள் கனவு கதாபாத்திரம் என்ன? என்ன மாதிரி கதாபாத்திரங்கள் நடிக்க விருப்பம்?
"என் கதாபாத்திரங்கள் ஒரே சாயலில் இருக்கக் கூடாது. ஒரே மாதிரி பாத்திரங்களில் ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் எனது திறமையை வெளிப்படுத்தவே விருப்பம். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு கிராமத்து வேடத்தில் நடிக்க வேண்டும். எனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
- கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா.
- இவர் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.
ஜெனிவாவில் திவ்யா ஸ்பந்தனா
தற்போது 40 வயதான நடிகை திவ்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், இந்த செய்திக்கு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கே.டி. லட்சுமி காந்தன் மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், திவ்யா ஸ்பந்தனா நன்றாக இருப்பதாகவும் அவரை பற்றி பரவிய செய்திகள் 100 சதவீதம் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை திவ்யா ஸ்பந்தனா தற்போது ஜெனிவாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Our beloved Former Social Media Chairperson Ms. @divyaspandana is ABSOLUTELY FINE. Rumors and some TV channel news are 100% WRONG. #Verified #DivyaSpandana pic.twitter.com/VuBvwhCzrP
— KTL (@K_T_L) September 6, 2023
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கியது.
ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கியது.
இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "நான் 15 நாட்களாக ஒரு வனப்பகுதியில் இருந்தேன். அங்கிருந்து திரும்பி ஊருக்கு வரும்போது எண்ணற்ற மிஸ்டு கால் வந்துட்டே இருந்தது. அப்போது, புரொடக்ஷன் சைடில் இருந்து போன் வந்தது. ரஜினி சார் படத்தில் நடிக்கணும், நெல்சன் இயக்குனருனு. ரஜினி சார் படம்னு சொன்னவுடன் கதை கேட்கணும் அவசியம் இல்ல. ஓகேன்னு சொல்லிட்டேன். இருந்தாலும், நெல்சன் பேசுனாரு, கேரக்டருடைய ஸ்ட்ரெக்சர் இதுதான் சொன்னார். நீங்க தான் முக்கியமான வில்லன்னு சொன்னார். அப்படி தான் படத்தில் வந்தேன்.
அந்த வர்மன் கேரக்டர், நல்ல வந்ததுக்கு முக்கியக்காரணம் ரஜினிசார் தான். சொப்பனத்தில் கூட யோசிக்கலன்னு படத்தில் ஒரு டயலாக் வரும் அப்படி ஒரு பாப்புலாரிட்டிதான் இப்போ எனக்கு கிடைச்சிருக்கு. படத்தில் நடிக்கும்போதும், மிக சந்தோஷமாகத் தான் நடித்தேன். நெல்சன் ரொம்ப நன்றிப்பா, ரஜினிசார் மறக்கமாட்டேன். கலாநிதி மாறன் சாருக்கு ரொம்ப நன்றி" என்று பேசினார்.
Actor Vinayakan speaks about his iconic character "Varman" and more ? Manasilayo!
— Sun Pictures (@sunpictures) September 6, 2023
Mega Blockbuster #Jailer in theatres near you! @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/6P7X1i8E6e
- நடிகர் ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜவான்' படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கவுரி கான் தயாரிப்பில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
'ஜவான்' படக்குழுவினர் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி கேள்விகளுக்கு பதில் அளிப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி-பதில் வருமாறு:-
கேள்வி : அட்லீயும், நீங்களும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்ற விரும்புவது உண்மையா?
ஷாருக்கான்:- "பிகில் பட தயாரிப்பின் போது நான் அட்லீயை சந்தித்தேன். அவர் சிஎஸ்கே மற்றும் கே.கே.ஆர் போட்டிகளுக்கு சென்றி ருந்தார். இதற்கு முன் அட்லீ என்னிடம் ஜவான் பற்றிய மூலக்கதையை சொன்னார். உங்களுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார். அப்படித்தான் ஜவான் தொடங்கியது.
கேள்வி :- நீங்கள் வில்லனா? அல்லது ஹீரோவா அல்லது வில்லனிக் ஹீரோவா? உங்களின் ரகசியத்தைப் பற்றி சொல்லுங்களேன்..?
ஷாருக்கான்:- இதில் ஒரு சாதாரண மனிதர் எல்லோருடைய பொது நலனுக்காகவும் அசாதாரணமான விசயங்களை செய்கிறார்'' என்றார்.
கேள்வி :- ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவம்?
விஜய் சேதுபதி- "ஷாருக்கான் நேர்காணலின் போது எப்படி புத்திசாலித்தனமாக கேள்விகளை எதிர்கொண்டு பதிலளிக்கிறார் என்பதை பார்த்து வியந்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி அறிந்து கொள்ள. அவரிடம் கேட்க பல கேள்விகள் உள்ளது'' என்றார்.
கேள்வி :- நீங்கள் ஒரு அதிரடி நாயகனா? அல்லது ஆயுள் காப்பீட்டுடன் உள்ள சாதாரண நபரா?
ஷாருக்கான்:- "என் இன்சூரன்ஸ் பாலிசி முடிந்துவிட்டது. பலமுறை காயம் அடைவதால் எனக்கு யாரும் காப்பீடு செய்ய விரும்பவில்லை. மேலும் ஆக்ஷன் படங்களை செய்வதை விரும்புவதற்கு ஒரே காரணம். என்னுடைய இளைய மகன் ஆப்ராம். அவர் ஆக்சன் -அனிமேஷன் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் கொண்ட படங்களை பார்க்க விரும்புவதால் அவருக்காக ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்'' என்றார்.
கேள்வி:- இவ்வளவு அழுத்தமான வில்லன் வேடத்திற்கு நீங்கள் எப்படி தயாரானீர்கள்?
விஜய்சேதுபதி:- "திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் நான் வல்லவன் என்பது எனக்குத் தெரியும். வேறு எதையும் என் தலைக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை. நான் செய்ய விரும்பாத வேடத்தை செய்தால் அது என் மனதை கெடுத்து விடும் என்று நம்புகிறேன்'' என்றார்.
கேள்வி :- ஜவானில் நடிக்க ஒப்புக்கொண்ட தருணம் குறித்து...?
ஷாருக்கான்:- "நான் மொட்டை ஹீரோவாக அறிமுகப்படுத்தப்படும் ஒரு காட்சி இருக்கிறது. அப்போது இயக்குனர் அட்லீ என் கையில் நிறைய பவுடரைக் கொட்டியது எனக்கு நினைவிருக்கிறது. நான் அந்த காட்சியிலும் நடித்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் நான் இறுதியாக அந்த காட்சியை பார்த்தபோது மறக்க முடியாததாக இருந்தது. ஜவான் படத்திற்கான எனது தருணம் அதுதான். '' என்றார்.
- நடிகர் சங்க பேரவை கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது.
- துணைத்தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்து வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்பிக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பேரவை கூட்டம் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது. தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. துணைத்தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்து வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்பிக்கிறார்.
பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும் பொதுச்செயலாளர் விஷால் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் பேசுகின்றனர். துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி அனைத்து சினிமா சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் அன்று மட்டும் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.