search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கங்கனாவை சந்தித்தால் கன்னத்தில் அறைவேன் - பாகிஸ்தான் நடிகை ஆதங்கம்
    X

    கங்கனா- நவுஷீன் ஷா

    கங்கனாவை சந்தித்தால் கன்னத்தில் அறைவேன் - பாகிஸ்தான் நடிகை ஆதங்கம்

    • நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்.
    • இவர் 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான தலைவி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.


    கங்கனா

    தற்போது இவர் 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார்.

    இந்நிலையில், கங்கனாவை நேரில் சந்தித்தால் கன்னத்தில் அறைவேன் என பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா தெரிவித்துள்ளார். அதாவது, நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்.


    நவுஷீன் ஷா

    அவர் எங்கள் நாட்டைப் பற்றியும் பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் சர்ச்சையான கருத்துகளை கூறுகிறார். மற்ற நாட்டைப் பற்றி எதற்காக அவர் பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள்." என ஆதங்கமாக பேசியுள்ளார்.

    Next Story
    ×