search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சரோஜா’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

    முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சரோஜா'. இப்படத்தில் வைபவ், பிரகாஷ் ராஜ், எஸ்.பி.சரண், பிரேம் ஜி, காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆக்ஷன், காமெடி ஜானரில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.


    இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதிலும் 'கோடான கோடி' பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி இன்று வரையிலும் மக்களை வைப்பாக்கும் ஒரு பாடலாக இருக்கிறது. 'சரோஜா' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை மும்பையில் படக்குழு கொண்டாடியுள்ளது. இதில் இயக்குனர் பா.இரஞ்சித் கலந்து கொண்டுள்ளார்.


    மேலும், விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.





    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன்.
    • இவர் தற்போது புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் சமூக ஊடகத்தில் தனது பணி சார்ந்த விசயங்கள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை அவ்வப்போது ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்வது வழக்கம்.


    இந்நிலையில், இவர் தற்போது தனது சமூக வலைதளத்தில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று இந்தியில் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசின் முடிவுக்கு அமிதாப் பச்சன் ஆதரவு தெரிவிப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.




    • நாம் பாரதியர்கள் என சேவாக் கூறியுள்ளார்.
    • சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முடிவுக்கு பல தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாரத் என மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்திருந்தார். அதில், ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது என கூறியிருந்தார்.

    சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஷ்ணு விஷால் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்தார். இந்த படம் தமிழக அளவில் வெற்றி கண்டது. ஏன் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு படமாக இருந்தது என்றே கூறலாம்.

    • நடிகர் விஷ்ணு விஷால் ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் 'பாரத்' பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நாட்டின் பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்? இது மிகவும் விசித்திரமாக உள்ளது. இந்தியா எப்போதும் 'பாரத்' ஆகவே இருந்தது. நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் நாம் அறிவோம். திடீரென ஏன் இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும்?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'.
    • இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மகால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.



    இவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.



    இந்நிலையில், இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும், இளையராஜாவும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் 'நாடோடி தென்றல்' ஆகும். தற்போது 'மார்கழி திங்கள்' திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல் அனைவரின் இதயங்களையும் தொடும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.



    மேலும், அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்றும் இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.


    • இயக்குனர் கே.பாலையா இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது.
    • இதில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இயக்குனர் கே.பாலையா புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், தீபா பாலு, பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ், கருணாகரன், வேல ராமமூர்த்தி ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பி.ஆர்.டாக்கீஸ் கார்ப்பரேஷன் (BR Talkies Corporation) சார்பில் பி.பாஸ்கரன் மற்றும் பி.ராஜபாண்டியன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்போதைக்கு 'புரொடக்ஷன் 2' என்று அழைக்கப்படுகிறது.


    கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ஜான் கொக்கன் பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் ’துணிவு’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவந்தார்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஜான் கொக்கன். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். 'பாகுபலி', 'கே.ஜி.எப்' போன்ற படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித்தின் 'சார்ப்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் வேம்புலியாக நடித்து அசத்தினார்.


    பின்னர், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான 'துணிவு' திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவந்தார். அஜித் தன் ஆசிரியர் என்று கூறிவரும் ஜான் கொக்கன் அடிக்கடி அவரை பற்றி நேர்காணல்களில் பேசி வருகிறார்.


    இந்நிலையில், இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அஜித்தை குறிப்பிட்டு ஜான் கொக்கன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகவே நமக்கு ஆசியர்களை கொடுத்துள்ளார். நம் வாழ்வில் உயரவும், நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எனக்கு அதுபோல அஜித்குமார். அவர் எனக்கு மட்டுமின்றி கோடிக்கணக்கானோருக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி. என் வாழ்வில் வந்ததற்கும், நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயங்களை செய்ய என்னை ஊக்குவித்ததற்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.




    • அஜித் நடிப்பில் எச்.வினோத் மூன்று படங்களை இயக்கினார்.
    • ’துணிவு’ திரைப்படம் எச்.வினோத்திற்கு மையில்கல்லாக அமைந்தது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து இவர் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.


    இதைத்தொடர்ந்து முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் எச்.வினோத் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கினார். இதில், 'துணிவு' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய மையில் கல்லாக அமைந்தது. தற்போது கமல்ஹாசனின் 233-வது படத்தை இவர் இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    இப்படி குறுகிய காலத்திலேயே திரைத்துறையில் தன் பெயரை நிலைநாட்டிய இயக்குனர் எச்.வினோத் இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் எச். வினோத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி எச்.வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.




    • இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'.
    • பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.

    அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.


    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘குஷி’.
    • இப்படம் ரூ.70 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ.70.23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் தனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.


    இது குறித்து அவர் பேசியதாவது, எனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை எங்கள் குடும்பங்களுக்கு தருகிறேன். அடுத்த பத்து நாட்களில் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்குவேன். தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்தத் தொகை வழங்கப்படும். அப்போது தான் குஷியின் வெற்றி எனக்கு முழுமையடையும் என்று பேசினார்.





    • சிம்புவின் 48-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
    • 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    சிம்பு - தேசிங்கு பெரியசாமி

    இ்ப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் சிம்புவும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் சந்தித்து பேசும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





    • ஜவான் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • வேட்டை, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து ஏழுமலையானை ஷாருக்கான் வழிபட்டார்.

    நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான 'ஜவான்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நேற்று இரவு திருப்பதிக்கு சென்றனர். குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டனர்.

    வேட்டை, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து ஏழுமலையானை ஷாருக்கான் வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் கோவிலை விட்டு வெளியே வந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ×