search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது.
    • இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் பல டாப் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். தன் நடிப்பினாலும், ஸ்டைலினாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த ரஜினியை 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

    இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் நெல்சனுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார்- காசோலைகளை பரிசாக வழங்கினார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினியை  முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று சந்தித்தார். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'லியோ' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், 'லியோ' படத்தில் நடிக்காதது குறித்து நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது இயக்குனர் லோகேஷ் 'லியோ' படத்தில் நடிப்பதற்காக கால் ஷீட் கேட்டு வந்தார். நான்கு மாதங்கள் கால் ஷீட் கேட்டார். ஆனால், இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்பதால் 'லியோ' படத்தை நிராகரித்துவிட்டேன். நான் கண்டிப்பாக விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என்று பேசினார்.

    • நடிகை தமன்னா, பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்ததையடுத்து சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.


    இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது அவருக்கு திருமணம் நடைபெறபோவதில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், " திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள தான் போகிறேன். ஆனால், இப்போது அதற்கான மனநிலை இல்லை.


    என் கேரியர் இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். படப்பிடிப்புதான் இப்போது என் மகிழ்வான இடம்" என்றார் பேசினார்.

    • சூப்பர் சிங்கர் மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.
    • சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல எளிமையானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.


    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல எளிமையானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது.

    கடந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா, மிமிக்ரி குரலில் பாடல்கள் பாடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஹர்ஷினி நேத்ரா எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஆவார். விழுப்புரம் நகரை சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது.


    ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவாராக இருந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் திறமையால் அனைவரையும் மயக்கி வருகிறார் ஹர்ஷினி நேத்ரா. கடந்த வார நிகழ்ச்சியில் 'ராசாத்தி' பாடல் பாடி அசத்திய அவர் அடுத்ததாக செய்த மிமிக்ரி தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி மற்றும் பாடகி தீ ஆகியோரின் குரலில் அச்சு அசலாக அவர்கள் பாடிய பாடலை பாடி அசத்தி அனைவரையும் மிரள வைத்தார். நடுவர்கள் அனைவரும் அவரின் திறமையை பார்த்து வியந்து அவரை வெகுவாக பாராட்டினர். அவர் மிமிக்ரியில் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திறமையால் ஒளிரும் பலருக்கு ஒரு ஒரு சிறப்பான மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.

    • முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி.
    • இவர் பேசிய வசனம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

    பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (66) உடல் நலக்குறைவால் காலமானார்.

    80-களின் பிரபல திரைப்பட நடிகராக இருந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'அபூர்வ சகோதர்கள்' திரைப்படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் இவர் பேசிய 'தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க' வசனம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.


    ஆர்.எஸ்.சிவாஜி

    இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் காமெடி நடிகராகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கார்கி' திரைப்படத்தில் ஆர்.எஸ்.சிவாஜியின் நடிப்பு பாராட்டை பெற்றது.

    இந்நிலையில், 66 வயதான ஆர்.எஸ்.சிவாஜி இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


    மார்க் ஆண்டனி போஸ்டர்

    இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் நாளை ( செப்டம்பர் 3) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

    ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


    இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினி மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு கார் மற்றும் காசோலையை பரிசாக வழங்கினார்.


    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.




    • நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.


    கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.


    இந்த நிலையில், நடிகர் விஜய் 'Fan boy' ஆக மாறிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அமெரிக்காவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடிகர் விஜய் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகியுள்ள 'தி ஈக்வலைஸர் 3' (The Equalizer 3) படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளார். அதில் டென்ஸல் வாஷிங்டன் வரும் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் 'Fan boy' ஆக மாறி எழுந்து நின்று தன் கைகளை விரித்து கொண்டாடுவதை இயக்குனர் வெங்கட் பிரபு புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.




    • பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • நெல்லூரை சேர்ந்த ரசிகர்கள் பவன் கல்யாணுக்கு அவரது உருவ சிலையை பரிசாக வழங்க முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினர்.

    அவரது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லூரை சேர்ந்த அவரது ரசிகர்கள் பவன் கல்யாணுக்கு அவரது உருவ சிலையை பரிசாக வழங்க முடிவு செய்தனர்.

    அதன்படி கேரளாவை சேர்ந்த 4 சிலை வடிவமைப்பு கலைஞர்கள் மூலம் சேலத்தில் 470 கிலோ எடையுள்ள வெள்ளி பவன் கல்யாண் சிலையை வடிவமைத்தனர். 40 அடி நீளம், 25 அடி அகலத்தில் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த வெள்ளி சிலையை நெல்லூர் நகர தலைவர் சுஜய் பாபு, ஜனசேனா தலைவர்கள் சென்னா ரெட்டி, மனு கிராந்தி ரெட்டி ஆகியோர் நடிகர் பவன் கல்யாணிடம் வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

    • டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் புது இணைய தொடரை ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
    • இதில் நடிகர் ஷாம், கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்,  இயக்குநர் ஶ்ரீதர் கே இயக்கத்தில், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிசான  "பாராசூட்" அறிவித்துள்ளது.

    நடிகர் கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிசைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இது ஆகும்.

    பல சூப்பர்ஹிட் படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கிய நடிகர் ஷாம், பன்முக திறமை கொண்ட நடிகர் கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த மூவருடன், திறமைவாய்ந்த குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன், பிரபல நடிகர்கள் VTV கணேஷ், பாவா செல்லதுரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்த வெப் சீரிசுக்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார்.  கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளார்.

    • கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்ணிவெடி என்ற படம் உருவாகி வருகிறது.
    • பெயரிடப்படாத 2 திரைப்படங்களை இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

    தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது.

    சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) உட்பட மேலும் இரண்டு பெயரிடப்படாத திரைப்படங்களை இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ளன.

    புதிய கூட்டு முயற்சி குறித்து பேசிய இன்வேனியோ நிறுவனத் தலைவர் அலங்கார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற அனுபவமிக்கவர்களுடன் ஒரே குழுவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படைப்பாற்றல், தொழில்நுட்ப திறன் மற்றும் உயர்தர பொழுதுபோக்கை வழங்குவதற்காக எங்கள் இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளது" என்று அலங்கார் கூறியுள்ளார்.

    ட்ரீம் வாரியர் பிக்சர்சின் எஸ்.ஆர். பிரபு பேசுகையில், "இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்" என்று தெரிவித்தார்.

    • நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
    • ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

    ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்திருந்தார். தற்போது ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன், நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார்.

    இதுபற்றிய வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கும் நலையில், இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×