search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
    • ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

    ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்திருந்தார். தற்போது ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன், நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார்.

    இதுபற்றிய வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கும் நலையில், இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
    • ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

    ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்தார். மேலும் ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில், அவரிடம் காசோலை அளித்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

    • சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 'கங்குவா' படப்பிடிப்புதள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது, 'கங்குவா' படப்பிடிப்பு தளத்தில் நெருப்புக்கு நடுவே இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் படக்குழு கேமராவுடன் நிற்கும் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    • ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    'ஜெயிலர்' திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


    இந்நிலையில், 'ஜெயிலர்' வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாதிநிதி மாறன் BMW i7 மற்றும் BMW X7 மாடல் காரில் ஒன்றை ரஜினியை தேர்ந்தெடுக்க கூறினார். இதில் BMW X7 மாடல் காரை ரஜினி தேர்ந்தெடுத்தார். இதனை கலாநிதி மாறன், ரஜினிக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதற்கு முன்பு கலாநிதி மாறன், நடிகர் ரஜினிக்கு காசோலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.




    • நடிகை அபர்ணா நாயர் கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    • தமிழில் எதுவும் நடக்கும் என்ற படத்திலும், தெலுங்கில் சின்னி சின்ன ஆசா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

    கேரள மாநிலம் மலப்புரம் தென்ஹிபாலம் பகுதியை சேர்ந்த நடிகை அபர்ணா நாயர் (வயது31). இவர் மலையாளத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

    பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், மாடலிங் துறையில் இருந்துவந்தார். கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

    நோட்புக், நிவேத்யம், மேகதீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம், அமைதி, நொடிகள், தெருவிளக்கு, பாலன் வக்கீல், கல்கி, தாமர, ஒருத்தி, உணர்தல் உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.

    தமிழில் எதுவும் நடக்கும் என்ற படத்திலும், தெலுங்கில் சின்னி சின்ன ஆசா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி சந்தனமாலை, ஆத்மசகி, மைதிலியும் வரும், தேவஸ்பர்ஷம் உள்ளிட்ட மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

    தற்சமயம் திருவனந்தபுரம் கரமனாதலா பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் நடிகை அபர்ணா நாயர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனைப்பார்த்த அவரது தாய் மற்றும் சகோதரி அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நடிகையை கொண்டு சென்றனர். அங்கு நடிகையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கரமனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், நடிகையின் உடல் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு நடிகையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நடிகை அபர்ணா நாயர் வீட்டில் இருந்த ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கியிருக்கிறார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் நடந்ததா? என்பது மர்மமாக உள்ளது. இதனால் நடிகை சாவு சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    பிரேத பரிசோதனை முடிவில் நடிகை எப்படி இறந்தார்? என்பது தெரிந்துவிடும் என்பதால் அதற்காக போலீசார் காத்திருக்கின்றனர். இருந்தபோதிலும் நடிகை சம்பந்தப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அபர்ணா நாயர் தூக்கில் பிணமாக தொங்கியபோது அவரது தாய் மற்றும் சகோதரியே வீட்டில் இருந்துள்ளனர். ஆகவே நடிகை அபர்ணா நாயருக்கு பிரச்சினை எதுவும் இருந்ததா? என்று அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை அபர்ணா நாயருக்கு திருமணமாகி சஞ்சித் என்ற கணவரும், திராயா மற்றும் கிருத்திகா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் நடிகை தூக்கில் தொங்கியபோது வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடிகை மர்மமாக இறந்திருப்பது மலையாள திரைத்துறை யினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடிகர் ராகவா லாரன்ஸ் ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், நடிகர் விஜய்க்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் மீது ஆசை இல்லை என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ், "விஜய் சாருக்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் மீது ஆசை இல்லை. விஜய் அவராகவே ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர். நமக்கு நாம் தான் போட்டி என்று அவர் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். விஜய்யிடம் நான் எப்போது பேசினாலும் தலைவர் எப்படி இருக்கிறார் என்று கேட்பார்" என்று பேசினார்.

    • நடிகர் பகத் பாசில், தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிகை நஸ்ரியாவை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் தன் தந்தை இயக்கிய 'கையெத்தும் தூரத்து' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். பின்னர், பிரைட், பெங்களூர் டேஸ், டிரான்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.


    இவர் தமிழில் 'வேலைக்காரன்', 'சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இவர் நடித்திருந்த ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.


    சொகுசு கார் வாங்கிய பகத் பாசில்

    இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் பகத் பாசில் அவர்களது திருமண நாளையொட்டி கேரளாவில் முதல் சொகுசு காரான 'land rover defender 90' என்ற காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
    • வெங்கட் பிரபுவின் பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

     இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி 68 குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு புகைப்படங்களை பகிர்ந்த அவர், "எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்" என்று நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக்செய்து பதிவிட்டுள்ளார்.

     இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
    • ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

    ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்-ஐ நேரில் சந்தித்து இருக்கிறார். மேலும் அவரிடம் காசோலை அளித்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

    • அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜவான்’.
    • இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


    இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பையின் புகழ்பெற்ற கெயிட்டி கேலக்ஸி (Gaeity Galaxy) திரையரங்கில் 'ஜவான்' திரைப்படம் காலை 6 மணி காட்சியாக திரையிடப்படுகிறது. இவ்வாறு 6 மணிக்கு ரிலீசாகும் முதல் இந்தி திரைப்படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    • பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'ஜவான்'.
    • இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    தமிழ் திரையுலகில் குறைந்த படங்களை கொடுத்தாலும் மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் நெல்சன். இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தை நான் இயக்குவதற்கு முக்கிய காரணமே விஜய் தான் அவர் தான் இந்த படத்தை எடுப்பதற்கு எனக்கு ஊக்கம் கொடுத்தார் என்று மேடை அதிரும்படியாக பேசியிருந்தார்.


    இந்நிலையில், இதுபோன்றொரு விஷயத்தை இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார். அதாவது, சென்னையில் நடைபெற்ற 'ஜவான்' ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லீ "என் அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். நீ என்ன பண்ணுவனு தெரியாது, இந்த படத்த நீ பண்ணணும்னு விஜய் அண்ணன் சொன்னாரு," என்று தெரிவித்தார்.

    இயக்குனர் நெல்சன் 'ஜெயிலர்' மூலம் சாதித்துவிட்டார். அதுபோன்று அட்லீ 'ஜவான்' மூலம் வரலாறு படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • ஐஸ்வர்யா அர்ஜுன் 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் -நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான 'சொல்லிவிடவா' என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.


    நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இந்த செய்தியை நடிகர் செந்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செந்தில், உமாபதி, நடிகர் அர்ஜுன் மகளை திருமணம் செய்யப்போகிறார் என்று கூறினார்.


    நடிகர் உமாபதி 2017-ஆம் ஆண்டு வெளியான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தின் மூலம் அறிமுகமான. பின்னர், 'மணியார் குடும்பம்', 'திருமணம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். உமாபதி 2021-ஆம் ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×