என் மலர்
சினிமா செய்திகள்
இதற்கு எல்லாம் விஜய்தான் காரணம்.. போட்டிபோட்டு புகழ்ந்த இயக்குனர்கள்
- பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'ஜவான்'.
- இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
தமிழ் திரையுலகில் குறைந்த படங்களை கொடுத்தாலும் மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் நெல்சன். இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தை நான் இயக்குவதற்கு முக்கிய காரணமே விஜய் தான் அவர் தான் இந்த படத்தை எடுப்பதற்கு எனக்கு ஊக்கம் கொடுத்தார் என்று மேடை அதிரும்படியாக பேசியிருந்தார்.
இந்நிலையில், இதுபோன்றொரு விஷயத்தை இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார். அதாவது, சென்னையில் நடைபெற்ற 'ஜவான்' ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லீ "என் அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். நீ என்ன பண்ணுவனு தெரியாது, இந்த படத்த நீ பண்ணணும்னு விஜய் அண்ணன் சொன்னாரு," என்று தெரிவித்தார்.
இயக்குனர் நெல்சன் 'ஜெயிலர்' மூலம் சாதித்துவிட்டார். அதுபோன்று அட்லீ 'ஜவான்' மூலம் வரலாறு படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.