search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் விஜய் ஆண்டனி பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார்.
    • இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், விஜய் ஆண்டனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் இனிமேல் தங்கள் பள்ளிகளில் நல்ல, சத்தான காலை உணவைப் பெறுவார்கள். இதுபோன்ற திட்டங்களில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இளம் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்து பசியின்றி படிப்பார்கள். அருமையான திட்டம். நன்றி மு.க.ஸ்டாலின் சார்" என்று பதிவிட்டுள்ளார்.


    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கலைஞர் படித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பள்ளியில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





    • ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    • காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய திரைத் துறை சார்ந்தவர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.

    இதில் தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படாததற்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் பலர், இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய விருது வென்றவர்களுக்கு நாட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராம் தேசிய விருது வென்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தசாப்தத்தின் மிக மோசமான படமாக காஷ்மீர் ஃபைல்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். "வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.


    புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.


    படைதலைவன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'படை தலைவன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.





    • தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.
    • கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்திய அரசு சார்பில் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில், கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், இரவின் நிழல் படத்திற்காக ஸ்ரேயா கோஷல், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.


    நானி பதிவு

    தமிழில் ஜெய்பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை தேர்வு குழு நிராகரித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததால் நடிகர் நானி உடைந்த இதயமுடைய எமோஜியை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஜெய்பீம் என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை நடிகை மீனா ஷேர் செய்துள்ளார்.
    • ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவணை சில நாட்கள் முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சி முகாமை தொடங்கினர். இந்த முகாமில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகக் கோப்பை 2023-ஐ நடிகை மீனா அறிமுகப்படுத்தி உள்ளார். ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவரது இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ள நடிகை மீனா விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

    இதுவரை எந்தவொரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளேன் என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

    கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிறகு நடிகை மீனாவுக்கு திரையுலகமே ஒன்று திரண்டு நிகழ்ச்சி நடத்தி உற்சாகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.


    ஜெயிலர் போஸ்டர்

    மேலும், 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




    • 'சந்திரமுகி -2' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் கதை கேட்காமலேயே சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்புக் கொண்டதாக இயக்குனர் பி. வாசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கங்கனாவிடம் இந்திப் படம் ஒன்றின் கதையை சொல்ல சென்றதாகவும் அப்போது 'சந்திரமுகி- 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதையும் அதில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க யாரையும் முடிவு செய்யவில்லை என்று தெரிந்ததும் நானே நடிக்கிறேன் என்று கங்கனா ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • மறைந்த நல்லாண்டி அவர்களுக்கு ஸ்பெஷல் மென்ஷன் அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    • தயாரிப்பாளர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் மற்றும் குழுவினருக்கு என் அன்பும் பாராட்டும்.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது 'கடைசி விவசாயி'படத்திற்கும், அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மறைந்த நல்லாண்டி அவர்களுக்கு ஸ்பெஷல் மென்ஷன் அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தயாரிப்பாளர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் மற்றும் குழுவினருக்கு என் அன்பும் பாராட்டும்.


    கமல்ஹாசன் பதிவு

    சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு நடிகர் எனும் புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கும் அல்லு அர்ஜூன், சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள "ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்" திரைப்படத்தின் இயக்குனர் ஆர். மாதவன் மற்றும் குழுவினர், பல பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி மற்றும் குழுவினர், புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசை பிரிவில் விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத், இரவின் நிழல் படத்தின் பாடலுக்காக சிறந்த பாடகி விருது பெற்ற ஷ்ரேயா கோஷல், சிறந்த கல்வித் திரைப்படம் பிரிவில் "சிற்பங்களின் சிற்பங்கள்" படத்தை இயக்கி விருது வென்றுள்ள இயக்குனர் பி. லெனின், "கருவறை" ஆவணப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தென்னிந்திய சினிமா உள்ளடக்கத்திலும், தொழில்நுட்பத்திலும் பல புதிய உச்சங்களை எட்டியதன் அடையாளம் தேசிய விருதுகளின் பட்டியலில் எதிரொலிக்கிறது. இந்த வெற்றி தொடரட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.





    • சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
    • போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி அசத்தி வருகிறார் தமன்.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் நடுவராக இசையமைப்பாளர் தமன் கலந்து கொண்டுள்ளார். பொதுவாக பாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடுவர்கள் பாடகர்களிடம் இறுக்கமாகவும், கண்டிப்பாகவும் நடந்து கொள்வார்கள். ஆனால், இதற்கு முன்பு கலந்துகொண்ட நடுவர்கள் போல் இல்லாமல், போட்டியாளர்களோடு மிக எளிமையாக பழகுவது, அவர்களுக்கு ஊக்கம் தருவது, சர்ப்ரைஸ் தருவது, சுவாரஸ்யமான கமெண்ட்கள் தந்து உற்சாகப்படுத்துவது என அசத்தி வருகிறார் தமன்.


    இந்த சீசன் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதிளியத்த இசையமைப்பாளர் தமன், கானா பாடலை பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.

    கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில், ஹரிணி, ரிச்சா ஆகிய இரு பாடகர்கள் "ஊர்வசி ஊர்வசி" பாடலை மிக அற்புதமாக பாடினார்கள். அவர்கள் பாடிய வீடியோவை, கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பகிர்வதாக வாக்குறுதி தந்தார் தமன். கவுரவ் எனும் பாடகர் "ரஞ்சிதமே ரஞ்சிதமே" பாடலை பாடினார். அதில் இம்ப்ரெஸ் ஆன தமன், அனிருத் மற்றும் விஜய்யிடம் கூட்டிப்போவதாக வாக்குறுதி தந்தார்.


    இதுமட்டுமல்லாமல் பிரபல பாடகர் ஆண்டனி தாஸ், தமனிடம் வாய்ப்புக் கேட்க அவருக்கு ஒரு புதிய தெலுங்குப் படத்தில் பாடல் வாய்ப்புத் தந்துள்ளார். அந்தப்பாடல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

    தமன் நடுவராக இல்லாமல் அனைவருடனும் மிக சகஜமாக பழகி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு ஆச்சர்யமாக இசையமைப்பாளர் தமனின் மனைவி, அவருக்கே தெரியாமல் சர்ப்ரைஸாக நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டார். அப்போது யாரும் அறியாத, தமனின் பல பர்ஸனல் பக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது  ஓய்வு நேரத்தில் தமன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மா.கா.பாவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் செய்தியை பகிர்ந்து கொண்டார்.


    • தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'.
    • இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

    அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


    கிரிமினல் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிரிமினல்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் டீசர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.





    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
    • தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில், சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படமாக 'தி காஷ்மீர் பைல்ஸ்' அறிவிக்கப்பட்டது. இது மக்கள் பலரின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருதிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "69-வது தேசிய விருதில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!


    மேலும், இரவின்நிழல் படத்தில் 'மாயவா சாயவா' பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின்சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.




    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
    • தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் இன்று வெளியானது.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் இன்று வெளியானது. இதில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக! " என்று பதிவிட்டுள்ளார்.




    ×