search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம்
    X

    நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம்

    • டி.ராஜேந்தரின் உயிருள்ள வரை உஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கங்கா
    • தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்தவர் கங்கா.

    சென்னை:

    பன்முகக் கலைஞரான டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'உயிருள்ள வரை உஷா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கங்கா (63). பி.மாதவன் இயக்கி, தயாரித்த 'கரையைத் தொடாத அலைகள்', விசுவின் இயக்கத்தில் 'மீண்டும் சாவித்திரி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் கங்கா.

    மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள இவர், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர், தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் கங்காவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிசெய்துள்ளனர். இவரது மறைவு திரையுலகைச் சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×