என் மலர்
சினிமா செய்திகள்
X
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து
Byமாலை மலர்1 Oct 2024 3:56 PM IST (Updated: 1 Oct 2024 4:52 PM IST)
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
- திரைப்பிரபலங்கள் பலரும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வருகின்றனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். திரைப்பிரபலங்கள் பலரும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை நடிகர் வடிவேலு நேரில் சந்தித்து வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலினை நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Next Story
×
X