என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![VIDEO : சுவர்களில் நிறங்களை பதித்தேன்- இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்! - சூரியின் நினைவலைகள் VIDEO : சுவர்களில் நிறங்களை பதித்தேன்- இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்! - சூரியின் நினைவலைகள்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9223483-soori.webp)
VIDEO : சுவர்களில் நிறங்களை பதித்தேன்- இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்! - சூரியின் நினைவலைகள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 'வெண்ணிலா கபடிகுழு' படத்தில் பரோட்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
- 'ஏழு கடல் ஏழு மலை', 'மாமன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சொந்த ஊரில் இருந்து வந்து பல பேர் இன்று உச்சத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் சினிமாத்துறையில் கால்பதிப்பதற்குள் சந்தித்த கடும் துன்பங்கள் ஏராளம். அதையும் தாண்டி சாதித்து இன்று ஒவ்வொரு இளைருக்கும் ரோல் மாடலாக உள்ளனர்.
அப்படி ஒருவர் தான் நடிகர் சூரி. தனக்கு கிடைத்த சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்த இவர் 2009-ல் வெளிவந்த 'வெண்ணிலா கபடிகுழு' படத்தில் பரோட்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின், நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தற்போது இவர் 'ஏழு கடல் ஏழு மலை', 'மாமன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சூரி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், 'சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சூரி ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அந்த ஹோட்டல் எதிரே புதியதாக கட்டப்பட்டிருக்கும் கட்டிடம் ஒன்றிற்கு பெயிண்டர் ஒருவர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்த சூரி, தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இதே வேலை பார்த்து வந்ததை நினைவுகூர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.