என் மலர்
சினிமா செய்திகள்
ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது நடிகர் சூரியின் 'கொட்டுக்காளி'
- சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
- சர்வதேச திரைப்பட விழாக்களில் கொட்டுக்காளி விருதுகளை குவித்து வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக சூரி நடிப்பில் விடுதலை 2 மற்றும் ஏழு கடல் ஏழு மழை திரைப்படங்களில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.