என் மலர்
சினிமா செய்திகள்
மும்பையில் தொழிலாளர்கள் மீது பயங்கரமாக மோதிய நடிகையின் கார்: ஒருவர் பலி
- டிரைவின் கட்டுப்பாட்ட்டை இழந்த கார் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
- சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.
மும்பையின் கண்டவளி என்ற இடத்தில் போயிசர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு சில பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, மராட்டிய நடிகை ஊர்மிளா கொத்தாரே அந்த வழியாக படபிடிப்பை முடித்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வேகமாக வந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை ஊர்மிளா கொத்தாரே லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தை ஏற்படுத்தியது ஹூண்டாய் வெர்னா கார் என்றும், வேகமாக வந்ததால் விபத்தை ஏற்படுத்தியது என்றும், ஏர்பேக் நடிகையுடன் உயிரை காப்பாற்றியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.