search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சர்வதேச அங்கீகாரத்தை தொடர்ந்து விரைவில் வெளியாகும் `கொட்டுக்காளி திரைப்படம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சர்வதேச அங்கீகாரத்தை தொடர்ந்து விரைவில் வெளியாகும் `கொட்டுக்காளி' திரைப்படம்

    • கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத்ராஜ் தனது கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.

    அந்த வகையில் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது.

    சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இது தவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது.

    20ஆவது FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது. பல சரவதேச விருதுகளையும் அங்கீகாரமும் இப்படத்திற்கு கிடைத்ததால். இப்படத்தின் மீது மக்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பல சர்வதேச ஊர்களுக்கு சென்றூ பாராட்டைப் பெற்ற கொட்டுக்காளி கடைசியாக தன் சொந்த மண்ணிற்கு வரவுள்ளது.

    திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர். படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக சூரி நடிப்பில் விடுதலை 2 மற்றும் ஏழு கடல் ஏழு மழை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×